கர்நாடக மாநிலத்தின் தலைநகரமாக விளங்குவது பெங்களூர். அந்த மாநிலத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றாக மைசூர் உள்ளது. இந்த நிலையில், பெங்களூரில் இருந்து மைசூருக்கு பயணிப்பதற்கு சுமார் 3 மணி நேரம் ஆகும்.




இந்த நிலையில், இந்த பயண நேரத்தை குறைப்பதற்காக புதிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது. அதாவது, பெங்களூர் – மைசூர் வரையிலான 118 கிலோ மீட்டர் தொலைவிற்கு இந்த புதிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது. ரூபாய் 8 ஆயிரத்து 480 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த சாலையை நாளை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த புதிய தேசிய நெடுஞ்சாலை காரணமாக 3 மணி நேர பயணம் 75 நிமிடங்களாக குறையும்.



  • 118 கிலோ மீட்டர் தொலைவிலான இந்த பெங்களூர் – மைசூர் தேசிய நெடுஞ்சாலை பணிகள் 2018ம் ஆண்டு தொடங்கியது.

  •  சர்வீஸ் சாலைகள் உள்பட மொத்தம் 10 லேன் கொண்ட நெடுஞ்சாலையாக இந்த எக்ஸ்பிரஸ்வே உருவாகியுள்ளது. 

  • 6 வழிச்சாலையாக உருவாகியுள்ள இந்த வழித்தடத்தில் கூடுதலாக சர்வீஸ் சாலைகள் 2 இரண்டு பக்கங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது.

  • 118 கிலோ மீட்டர் தொலைவிலான இந்த புதிய நெடுஞ்சாலை 11 மேம்பாலங்களும், 64 சுரங்கவழி பாதைகள், 5 புறவழிச்சாலைகளையும், 42 சிறிய பாலங்களையும் இந்த புதிய நெடுஞ்சாலை இணைக்கிறது.

  • இந்த நெடுஞ்சாலை 2 கட்டமாக அமைக்கப்பட்டது. முதற்கட்டமாக 58 கிலோமீட்டர் தொலைவில் பெங்களூர் முதல் நிடாகட்டா வரையிலும், இரண்டாம் கட்டமாக 61 கிலோமீட்டர் தொலைவிற்கு நிடாகட்டா – மைசூர் வரையிலும் அமைக்கப்பட்டுள்ளது.





  • இந்த புதிய தேசிய நெடுஞ்சாலை பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது.

  • இந்த தேசிய நெடுஞ்சாலையானது பெங்களூரில் இருந்து மைசூர் செல்வதை எளிமைப்படுத்துவது மட்டுமின்றி கூர்க், ஊட்டி, கொடைக்கானல் ஆகிய பகுதிகளுக்கு பெங்களூரில் இருந்து செல்வதை எளிமையாக்கும்.

  • இந்த எக்ஸ்பிரஸ்வே நெடுஞ்சாலையில் பிரதான லேன்களான ஆறு வழித்தடத்தில் இரண்டு அல்லது மூன்று சக்கர வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. அவர்கள் சர்வீஸ் சாலையை மட்டுமே பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • நாட்டிலே முதன்முறையாக பிரதான சாலையை பயன்படுத்த 2 அல்லது மூன்று சக்கர வாகனங்களுக்கு அனுமதியில்லாத நெடுஞ்சாலையாகவும் இந்த சாலை உருவாகியுள்ளது. 

  • இந்த தேசிய நெடுஞ்சாலைக்கு பா.ஜ.க. எம்.பி. பிரதாப் சிம்ஹா காவேரி ஆற்றின் நினைவாக காவேரி என்று பெயர் வைக்க வேண்டும் வலியுறுத்தியிருந்தார். இதுவரை இந்த பாலத்திற்கான பெயர் சூட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர். தற்போது புதியதாக அமைக்கப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ள பெங்களூர் – மைசூர் நெடுஞ்சாலை கூட பா.ஜ.க.வின் தேர்தல் வியூகம் என்று அரசியல் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.


மேலும் படிக்க: படுத்தியெடுக்கும் H3N2 வைரஸ்...செய்யவேண்டியது என்ன? செய்யக்கூடாதது என்ன? உலக சுகாதார அமைப்பு சொல்வதை கேளுங்கள்..!


மேலும் படிக்க: Liquor Policy Case: திகார் சிறையில் சிசோடியா.. அடுத்த கைது கவிதாவா? இன்று அமலாக்கத்துறையில் நேரில் ஆஜர்!