உலகம் முழுவதும் உள்ள தலைவர்களில் மிகவும் பிரபலம் வாய்ந்த தலைவர்கள் தொடர்பாக அவ்வப்போது ஆய்வு நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில் தற்போது மார்னிங் கன்சல்ட் (Morning Consult) என்ற அமைப்பு அப்படி ஒரு ஆய்வை நடத்தியுள்ளது. இந்த ஆய்வில் தலைவர்கள் குறித்து அந்த நாட்டு மக்களிடம் அவர் மீது உள்ள நம்பிக்கை தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது.
அதில் அவர்கள் கொடுத்த பதில்களை வைத்து தலைவர்களின் பிரபலம் கணிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் உலகளவில் தங்களுடைய நாட்டு மக்களிடம் நம்பிக்கை பெற்ற பிரபல தலைவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் மொத்தமாக 75% இந்தியர்களின் நம்பிக்கை பெற்ற பிரபல தலைவராக இந்திய பிரதமர் மோடி முதல் இடத்தை பிடித்துள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக மெக்சிகோ நாட்டின் அதிபர் ஆண்ட்ரஸ் லோபஸ் 63% மக்களின் நம்பிக்கையை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார்.
மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் 58% மக்களின் நம்பிக்கையை பெற்று பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 41% மக்களின் நம்பிக்கையை பெற்று 11வது இடத்தை பிடித்துள்ளார். அவருக்கு அடுத்து 12வது இடத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் டூருடோ பிடித்துள்ளார்.
மேலும் இந்த ஆய்வில் பிரதமர் மோடி கொரோனா இரண்டாவது அலையின் போது கையாண்ட விதம் குறித்தும் மக்களிடம் கேட்கப்பட்டுள்ளது. அதில் பலரும் பிரதமர் மோடிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்த ஆய்வில் பங்கேற்ற 72% இந்திய மக்கள் பிரதமர் மோடி இந்தியாவை சரியான பாதையில் எடுத்து செல்வதாக கூறியுள்ளதாக தெரிவிக்கிப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் மக்கள் தேர்தலின் போது தலைவர்களை பார்க்கும் விதமும் மற்ற நேரங்களில் பார்க்கும் விதமும் வித்தியாசமான ஒன்று தெரியவந்துள்ளது. உதாரணமாக தென்கொரியா பிரதமர் யூன் யூயில் தேர்தலில் அமோக வெற்றி பெற்று இருந்தாலும் இந்த ஆய்வில் 21% மக்களின் நம்பிக்கையை மட்டுமே பெற்றுள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் மேக்ரான், கனடா பிரதமர் டூருடோ ஆகியோரின் நம்பிக்கையை குறை ரஷ்யா-உக்ரைன் போர் முக்கிய காரணம் என்று ஆய்வு தெரிவித்துள்ளது. இவை தவிர அந்தந்த நாடுகளில் இவர்கள் கொரோனா தொற்று மற்றும் தடுப்பூசி ஆகியவற்றை கையாண்ட விதமும் ஆய்வில் இவர்களுடைய மதிப்பு குறைய காரணமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:அதிவேக ’வந்தே பாரத்’ ரயில் சோதனை ஓட்டம்.. 180 கி.மீ வேகத்தைக் கடந்து சாதனை! வாவ் வீடியோ