கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியுள்ளது. அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. குறிப்பாக கொரோனா அலை வீரியமாக உள்ள மகாராஷ்டிராவில் கடுமையான கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. 


இந்நிலையில் அனைத்து மாநில ஆளுநர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட உள்ளார். கொரோனா விவகாராத்தில் ஆளுநர்களோடு பிரதமர் நடத்தும் முதல் ஆலோசனை இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலோசனையில் குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு கலந்து கொள்கிறார்