நாட்டில் நீண்ட காலம் ஆட்சியில் இருந்தவர்கள் பழங்குடிகளில் முன்னேற்றத்தில் அக்கறை காட்டவில்லை எனவும், அது கடும் உழைப்பைக் கோரும் பணி என்பதால் இவ்வாறு நடந்துகொண்டதாகவும், பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்துள்ளார்.
மேலும், அவர் தான் வாக்குகளுக்காகவோ, தேர்தலில் வெல்ல வேண்டும் என்பதற்காகவோ வளர்ச்சித் திட்டங்களை உருவாக்குவதில்லை எனவும், மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காகவே செய்வதாகவும் கூறியுள்ளார்.
`நாட்டை நீண்ட நாள்களாக ஆட்சி செய்தவர்கள் பழங்குடிகள் வாழும் பகுதிகளின் வளர்ச்சியில் அக்கறை காட்டவில்லை. அது கடும் உழைப்பைக் கோரும் பணி என்பதால் அவர்கள் அப்படி நடந்துகொண்டனர்’ எனப் பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தின் நவ்சாரி மாவட்டத்தில் உள்ள பழங்குடி மக்கள் வாழும் பகுதியான குட்வெல்லில் சுமார் 3050 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்த போது பேசினார். மேலும் அவர் குஜராத் கௌரவ் அபியான் பேரணியையும் தொடங்கி வைத்தார்.
`கடந்த காலங்களில், தடுப்பூசி செலுத்துவது முதலான பிரச்சாரங்களைப் பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளுக்கு எடுத்துச் செல்வதற்கு பல மாதங்கள் ஆனது.. ஆனால் தற்போது வளர்ந்த நகரங்களைப் போலவே பழங்குடி பகுதிகளிலும் அவை நேரடியாக சென்று சேர்கின்றன’ என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பேரணியில் கலந்து கொண்ட மக்களிடம் கொரோனா எதிர்ப்புத் தடுப்பூசியை இலவசமாக பெற்றுக் கொண்டனரா இல்லை எனப் பிரதமர் கேட்ட போது மக்கள் அனைவரும் ஆமோதித்து குரல் எழுப்பினர். மேலும், கடந்த இருபது ஆண்டுகளாக குஜராத் மாநிலத்தின் அசுர வேக வளர்ச்சியே அம்மாநிலத்தின் பெருமை எனவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்