பிரதமர் மோதி பதவியேற்ற நாள் முதல் கடந்த 7 ஆண்டுகளில் உணவிற்காக முட்டும் 100 கோடி ரூபாயை செலவிட்டிருப்பதாகவும். அதுவும் அந்த தொகையை அரசு கஜானாவில் இருந்து எடுத்துள்ளதாகவும் சில தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும் இந்த தகவல்கள் அனைத்தும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்டது என்று வைரலாகும் அந்த செய்தியில் கூறப்படுகிறது. 






இதுகுறித்து ஆய்வு நடத்தியபோதும் பிரதமர் மோடி உணவிற்காக 100 கோடி செலவு செய்ததற்கான தரவுகள் எதுவும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மோடிக்கான அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் இந்த செய்தி குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. பொதுவாக பிரதமர் குறித்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கு இந்த இணையத்தில்தான் பதிலளிக்கப்படும் என்பதும் நினைவுகூரத்தக்கது. இறுதியாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் மோடியின் செலவுகள் குறித்து கேட்டகப்பட்ட கேள்விக்கு இந்த இணையத்தில் பதில் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.   


மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான அந்த தகவலில் பிரதமர் மோடி தனது உணவு செலவுகளை தானே ஏற்பதாக குறிப்பிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது. அதனால் மோடி உணவிற்காக கடந்த 7 ஆண்டுகளில் 100 செலவு செய்தார் என்று பரவும் செய்தி வெறும் வதந்தி என்று தற்போது நிரூபணமாகி உள்ளது. இதுபோன்று ஆதாரம் இல்லாமல் பரவும் செய்திகளால் பெரும் சர்ச்சைகள் ஏற்படுவது வாடிக்கையாகி உள்ளது. மக்கள் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.  


பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஜம்மு-காஷ்மீர் அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டம் நேற்று நிறைவடைந்தது. இதில், பல கோரிக்கைகள் பிரதமரிடம் முன்வைக்கப்பட்டன.


டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, முன்னாள் முதல்வா்கள் தேசிய மாநாட்டு கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா, அவருடைய மகன் ஒமா் அப்துல்லா, காங்கிரஸ் மூத்த தலைவா் குலாம் நபி ஆசாத், மக்கள் ஜனநாயக கட்சித் தலைவா் மெஹபூபா முஃப்தி, முன்னாள் துணை முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான டாரா சந்த், மாா்க்சிஸ்ட் கட்சி தலைவா் முகமது யூசுஃப் தாரிகாமி உள்ளிட்டோர் பங்குபெற்றனர். சுமார் மூன்று மணி நேரமாக இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், பல கோரிக்கைகள் பிரதமர் நரேந்திர மோடியின் முன்வைக்கப்பட்டன.