வேற்றுமையில் ஒற்றுமை என்பது இந்தியா என்னும் கருத்துருவுக்கே தூணான ஒன்று. இந்தியாவில் பேசப்படும் பல மொழிகள், இனங்கள், மதங்கள் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் ஒரே ஃபார்முலாவாக பயன்படுத்தப்படுகிறது. மனிதத்தின் அடிப்படை இலக்கணமாக இதனை கொண்டாடும் இந்தியாவை பல்வேறு நாடுகள் வியந்துதான் பார்க்கின்றன. ஒவ்வொரு மாநிலமும் அதன் தனித்துவமான மொழியைக் கொண்டுள்ளது, அதன் வளமான இலக்கியத் தொகுப்பைக் கொண்டுள்ளது, வரலாற்றைக் கொண்டுள்ளது.






மோடி பகிர்ந்த வீடியோ


இந்த நிலையில் இதனை வெளிப்படுத்தும் வகையில் ப்ரம்மாஸ்திரா திரைப்படத்தின் பிரபலமான கேசரியா பாடலை ஸ்னேதீப் சிங் கல்சி 5 வெவ்வேறு மொழிகளில் பாடியுள்ளார், அவருடைய வீடியோ ஒரே இரவில் வைரலாகி உள்ளது. தற்போது, பிரதமர் நரேந்திர மோடியும் அந்த வீடியோவை அருமையான தலைப்புடன் பகிர்ந்துள்ளார். “திறமையான @SnehdeepSK என்பவர் செய்த இந்த அற்புதமான தொகுப்பைக் கண்டேன். மெல்லிசைக்கு கூடுதலாக, இது ‘ஏக் பாரத் ஷ்ரேஷ்டா பாரத் (ஒரே இந்தியா, சிறப்பான இந்தியா)’ என்ற உணர்வின் சிறந்த வெளிப்பாடு", என்று எழுதியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்: Russia Ukraine Crisis: கைது செய்யப்படுவாரா ரஷிய அதிபர் புதின்? உக்ரைன் விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பிப்பு..!


8 லட்சம் பார்வைகள்


8 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளுடன், பிரதமர் மோடியின் பதிவு வேகமாக வைரலாகி வருகிறது. ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் நடித்த பிரம்மாஸ்திரா திரைப்படத்தின் பிரபலமான பாடலைதான் சினேதீப் பாடினார். இந்தப் பாடலை முதலில் பாடியவர் அரிஜித் சிங். மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்த பாடலை பாடி இணையத்தை மயக்கினார் சினேதீப்.










ஆனந்த் மஹிந்திரா


சினேதீப்பின் வீடியோவை தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா உட்பட பலர் பகிர்ந்துள்ளனர். "மிக அழகாக உள்ளது. உடைக்க முடியாத, ஒன்றுபட்ட இந்தியா இப்படித்தான் ஒலிக்கிறது,” என்று தலைப்பில் ஆனந்த் மஹிந்திரா எழுதினார். கேசரியா பாடல் அரிஜித் சிங் குரலில், ப்ரீதம் இசையமைக்க, பாடல் வரிகளை அமிதாப் பட்டாச்சார்யா எழுதி வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.