இந்தியாவில் 74 வது குடியரசு தின விழாவானது, நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. மத்திய அரசு சார்பில் குடியரசு தின விழா டெல்லியில் உள்ள கடமை பாதையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்தாண்டு சென்டிரஸ் விஸ்டா திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட கடமையின் பாதையில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இந்தியா கேட் அருகே உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். 


பின்பு, அங்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடி ஏற்றினார். அப்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டு, கொடி வணக்கம் செலுத்தியவுடன் அணிவகுப்பு தொடங்கியது. 


அணிவகுப்பு தொடர்பான புகைப்படங்களை பிரதமர் மோடி சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். 


கடமை பாதை:










தேசிய போர் நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்திய மோடி:


 






கலை நிகழ்ச்சிகள்


கடமை பாதையில் இந்தியாவின் பன்முக கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் குடியரசு தின விழாவில் அலங்கார ஊர்திகள் அணிவகுத்தன. அந்தந்த மாநிலங்களின் பண்பாடு, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அலங்கார ஊர்திகள் அணிவகுத்து சென்றது. அதன்படி ஆந்திரா, அசாம், உத்தரகாண்ட், திரிபுரா, குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட 17 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுத்தது. மேலும் நாடு முழுவதிலும் இருந்து 500க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் பங்கேற்று கலை, கலாச்சாரத்தை பிரதிபலிக்கு வண்ணம் நிகழ்ச்சிகளை நடத்தினர்.


தமிழ்நாடு ஊர்தி:


தமிழ்நாடு அரசு சார்பில் இந்தாண்டு பங்கேற்ற அலங்கார ஊர்தியில் சங்க காலம் முதல் இன்று வரை சமூக வளர்ச்சி, மேம்பாடு, சமூக மாற்றத்திற்கு பெண்கள் வழங்கிய பங்களிப்பு குறித்து அலங்கார ஊர்தி வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆத்திச்சூடி இயற்றிய ஔவையார், வீர மங்கை வேலுநாச்சியார் ஆகியோரின் உருவங்கள் அலங்கார ஊர்தியின் முகப்பு பக்கத்தில் இடம் பெற்றது.


ஊர்தியின் பின்பக்கத்தில் சோழப்பேரரசர் கட்டிய தஞ்சாவூர் பிரகதீஸ்வர் கோயிலின் மாதிரி வடிவம் இடம் பெற்றது. அலங்கார ஊர்தியுடன் கொம்பு மேளம், நாதஸ்வரம், தவில் வாசித்தபடி இசைக்கலைஞர்கள் அலங்கார ஊர்தியில் அமர்ந்து சென்றப்படி இருந்தது. மையப்பகுதியான அலங்கார ஊர்தியில் கர்நாடக இசை பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி, பரத நாட்டிய கலைஞர் பால சரஸ்வதி, சமூக சீர்திருத்தவாதி, எழுத்தாளர் மற்றும் திராவிட இயக்கத்தின் அரசியல் ஆர்வலர் மூவலூர் ராமாமிர்தம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, 105 வயதிலும் விவசாய துறையில் சாதித்து வரும் பாப்பம்மாளின் உருவங்கள் அடங்கிய சிலை இடம்பெற்றது.