இந்துஸ்தான் டைம்ஸின் 100-வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் அஞ்சல் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார்.
அஞ்சல் தலை வெளியீட்டு விழாவில் பேசிய பிரதமர் மோடி, கடந்த 100 ஆண்டுகளில் 25 ஆண்டுகால அடிமைத்தனத்தையும், 75 ஆண்டுகால சுதந்திரத்தையும் கண்டுள்ளோம் என்றும், இந்தியாவின் தலைவிதியை உருவாக்கிய இந்தியாவின் சாமானிய மனிதனின் திறன் மற்றும் விவேகம் இந்தியாவுக்கு வழிகாட்டியதாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் சாதாரண குடிமகனின் இந்தத் திறனை அங்கீகரிப்பதில் நிபுணர்கள் அடிக்கடி தவறு செய்துள்ளனர் என்றும் அவர் கூறினார். ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறும் போது, நாடு சிதறுண்டு போகும் என்று கூறப்பட்டது என்றும், நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டபோது, சிலர் நெருக்கடி நிலை என்றென்றும் நீடிக்கும் என்று கருதியதாக பிரதமர் மோடி கூறினார்.
"போரை எதிர்த்து போராடிய சாமானியன்"
அதே நேரத்தில் சில நபர்களும் நிறுவனங்களும் அவசரநிலையை அமல்படுத்தியவர்களிடம் தஞ்சம் புகுந்தனர் என்றும் கூறினார். அந்த நேரத்திலும் கூட, இந்திய குடிமக்கள் எழுந்து நின்று நெருக்கடி நிலையை வேரோடு பிடுங்கி எறிந்தனர் என்று மோடி கூறினார்.
சாமானிய மனிதனின் வலிமையை மேலும் விளக்கிய மோடி, கோவிட் தொற்றுநோய்க்கு எதிரான வலுவான போரை எதிர்த்துப் போராடியதில் சாமானிய குடிமக்களின் உணர்வைப் பாராட்டினார். கடந்த காலத்தை சுட்டிக்காட்டிய பிரதமர், 1990-களில் இந்தியா 10 ஆண்டுகளில் 5 தேர்தல்களைக் கண்ட காலம் இருந்தது என்றும், இது நாட்டில் நிலையற்ற தன்மையை வெளிப்படுத்தியது என்றும் கூறினார்.
செய்தித்தாள்களில் எழுதும் வல்லுநர்கள் இதே பாணியில் விஷயங்கள் தொடரும் என்று கணித்திருந்தாலும், இந்திய குடிமக்கள் அவை தவறு என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர் என்று அவர் மேலும் கூறினார். இன்று உலகம் முழுவதும் நிச்சயமற்ற தன்மை மற்றும் நிலையற்ற தன்மை பற்றி பேசப்படுகிறது என்று கூறிய மோடி, உலகின் பல நாடுகள் புதிய ஆட்சியாளர்கள் ஆட்சிக்கு வரும் என்று கூறியதாகவும், அதே நேரத்தில் இந்தியாவில் மக்கள் அதே அரசை மூன்றாவது முறையாக தேர்ந்தெடுத்துள்ளனர் என்றும் கூறினார்.
பிரதமர் மோடி பேசியது என்ன?
கடந்த காலக் கொள்கைகள் குறித்து பேசிய மோடி, "நல்ல பொருளாதாரம் மோசமான அரசியல்" என்ற சொற்றொடர் நிபுணர்களால் ஊக்குவிக்கப்பட்டு அரசுகளால் ஆதரிக்கப்பட்டது என்றார். மோசமான நிர்வாகம் மற்றும் திறமையின்மையை மூடிமறைக்க முந்தைய அரசுகளுக்கு இது ஒரு வழியாக மாறியது என்று அவர் கூறினார்.
இது நாட்டில் சமச்சீரற்ற வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது, இது அரசின் மீதான மக்களின் நம்பிக்கையை சீர்குலைத்துள்ளது என்றும் அவர் கூறினார். மக்களின் முன்னேற்றம், மக்களுக்கான முன்னேற்றம், மக்களால் முன்னேற்றம் என்ற தாரக மந்திரத்தை உறுதி செய்ததன் மூலம் மக்களின் நம்பிக்கையை தமது அரசு மீண்டும் வென்றுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார்.
புதிய மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதே அரசின் நோக்கம் என்றும், இந்திய மக்கள் தங்கள் நம்பிக்கையின் மூலதனத்தை அவர்களிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் கூறினார். சமூக ஊடக யுகத்தில் தவறான தகவல்கள் இருந்தபோதிலும், இந்திய மக்கள் எங்கள் மீதும், எங்கள் அரசு மீதும் நம்பிக்கை வைத்துள்ளனர் என்று மோடி குறிப்பிட்டார்.