22ஆவது சர்வதேச விருது.. மாஸ் காட்டும் பிரதமர் மோடி.. அடடே!
இலங்கை அரசின் விருதினை பெறுவதன் மூலம் 22ஆவது சர்வதேச விருதுக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் பிரதமர் மோடி. அதன் முழு விவரத்தை இங்கே காணலாம்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று இலங்கை அதிபர் திசநாயக்க 'இலங்கை மித்ர விபூஷனா' என்ற விருதை வழங்கியுள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு, பிரதமராக பதவி ஏற்றியதிலிருந்து மோடிக்கு பல சர்வதேச விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது, இலங்கை அரசின் விருதினை பெறுவதன் மூலம் 22ஆவது சர்வதேச விருதுக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் பிரதமர் மோடி.
மோடிக்கு மேலும் ஒரு மகுடம்:
Just In




இதற்கு நன்றி தெரிவித்த மோடி, இது இந்தியா மற்றும் இலங்கை மக்களுக்கு இடையே ஆழமாக வேரூன்றிய நட்பு மற்றும் வரலாற்று உறவுகளை அடையாளப்படுத்துவதாக கூறினார். எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
“அதிபர் திசநாயக்காவால் 'இலங்கை மித்ர விபூஷனா' என்ற விருது எனக்கு வழங்கப்பட்டமை மகத்தான பெருமைக்குரிய விஷயமாகும். இந்த உயரிய கௌரவம் எனக்கு மட்டும் உரித்தான ஒன்றல்ல, இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களுக்கும் கிடைக்கப்பெற்ற உயரிய மரியாதையாகும்.
அத்துடன் இந்திய - இலங்கை மக்களிடையிலான வரலாற்று ரீதியான உறவு, ஆழமாக வேரூன்றிக் காணப்படும் நட்புறவின் அடையாளத்தை குறிக்கிறது. இந்தக் கௌரவத்துக்காக இலங்கை அதிபர், அரசு மற்றும் மக்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்’’ என பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி பெற்ற மற்ற விருதுகள்:
கம்பேனியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் லோகோ:
பசிபிக் தீவு நாடுகளின் ஒற்றுமைக்காக உழைத்ததற்காகவும், உலகளாவிய தெற்கின் பிரச்னைகளை முன்னெடுத்துச் சென்றதற்காகவும் மிக உயர்ந்த குடிமகன் விருதை பப்புவா நியூ கினியா வழங்கியது.
கம்பேனியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் பிஜி:
கடந்த 2023ஆம் ஆண்டு, மே மாதம், பிரதமர் மோடியின் உலகளாவிய தலைமையை அங்கீகரித்து பிஜியின் உயரிய விருது வழங்கப்பட்டது.
பலாவ் குடியரசின் எபகல் விருது:
கடந்த 2023ஆம் ஆண்டு, மே மாதம், பப்புவா நியூ கினியாவிற்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு எபகல் விருதை அந்நாட்டு ஜனாதிபதி சுராங்கல் எஸ். விப்ஸ் ஜூனியர் வழங்கினார்.
ஆர்டர் ஆஃப் தி ட்ரூக் கியால்போ:
கடந்த 2021ஆம் ஆண்டு, டிசம்பரில் பிரதமர் மோடிக்கு மிக உயர்ந்த விருதான ஆர்டர் ஆஃப் ட்ருக் கியால்போவை பூடான் வழங்கி கௌரவித்தது.
அமெரிக்க அரசு வழங்கிய லெஜியன் ஆஃப் தி மெரிட்:
சிறப்பான சேவை புரிந்ததற்காகவும் சாதனைகளை படைத்ததற்காகவும் அமெரிக்க பாதுகாப்பு படை இந்த விருதை வழங்கி வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு, பிரதமர் மோடிக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
கிங் ஹமத் ஆர்டர் ஆஃப் தி ரினைசன்ஸ்:
பஹ்ரைன் அரசால் வழங்கப்படும் உயரிய விருது. கடந்த 2019ஆம் ஆண்டு, இந்த விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.
ஆர்டர் ஆஃப் தி டிஸ்டிங்குவிஷ்ட் ரூல் ஆஃப் நிஷான் இசுதீன்:
வெளிநாட்டு தலைவர்களுக்கு மாலத்தீவுகள் அரசால் வழங்கப்படும் உயரிய விருது.