குருநானக், ராணி லட்சுமிபாய், இந்திரா காந்தி ஆகியோருக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.


ஆங்கிலேயப் படைகளுக்கு எதிராக கடுமையான போரில் ஈடுபட்ட ஜான்சி ராணி லட்சுமி பாய் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி, அவரது துணிச்சலும், தேசத்துக்கு ஆற்றிய மகத்தான பங்களிப்பையும் என்றும் மறக்க முடியாது என்றார். 




"ராணி லக்ஷ்மிபாயை அவரது ஜெயந்தி அன்று நினைவு கூறுகிறேன். அவரது துணிச்சலும், நமது தேசத்திற்கான மகத்தான பங்களிப்பையும் மறக்க முடியாது. காலனித்துவ ஆட்சிக்கு எதிரான அவரது உறுதியான எதிர்ப்பிற்கு உத்வேகம் அளித்தவர்" என்று மோடி ட்வீட் செய்துள்ளார். 






லக்ஷ்மி பாய், காலனித்துவ ஆட்சிக்கு எதிரான 1857 கிளர்ச்சியின் ஒரு முக்கிய நபராக இருந்தவர், இது இந்தியாவின் முதல் சுதந்திரப் போராகவும் வகைப்படுத்தப்படுகிறது, அவர் தைரியமாக பிரிட்டிஷ் படைகளுடன் போராடும் போது தனது உயிரைக் கொடுத்தார்.




இந்த நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. இதில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்திர பிரதேசத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கலந்துக்கொண்டனர்.