ஹரியானா மாநிலத்தில்  2,600 படுக்கைகள் கொண்ட தனியார் மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.  இம்மருத்துவம்னையானது அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆய்வகங்களை  கொண்டுள்ளது.


ஃபரிதாபாத்


ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில், அமிர்தா தனியார் மருத்துவமனையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் ஹரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா மற்றும் முதல்வர் மனோகர் லால் கட்டார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.






இவ்விழாவில் பேசிய மோடி, மருத்துவமும் ஆன்மீகமும் இந்தியாவில் மிக நெருக்கமாக இணைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் பேசிய அவர்,  தொழில்நுட்பம் மற்றும் நவீனமயமாக்கல் ஆகியவற்றின் கலவையானது சுகாதாரத் துறையில் நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்றும், சுகாதார மற்றும் கல்வித் துறைகளை ஒரு குறிக்கோள் முறையில் மாற்ற அரசுகளும், பலரும் முன்வருவதை உறுதி செய்ய இந்தியா முயற்சித்து வருவதாகவும் கூறினார்.






அமிர்தா தனியார் மருத்துவமனை:


அமிர்தா மடத்தின் ஆதரவுடன் கட்டப்பட்டுள்ள இம்மருத்துவமனை, 130 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இந்த  அதிநவீன அமிர்தா மருத்துவமனை, ஒரு பிரத்யேக ஏழு மாடி ஆராய்ச்சித் தொகுதியைக் கொண்டுள்ளது. சுமார் 6,000 கோடி மதிப்பீட்டில் ஆறு ஆண்டுகளில் கட்டப்பட்டுள்ளது.


ஃபரிதாபாத்தில் உள்ள மெகா மருத்துவமனை வளாகத்தில் ஒரு மருத்துவ கல்லூரியும் அமைக்கப்படவுள்ளது. இம்மருத்துவமனையில், இரைப்பை அறிவியல், சிறுநீரக அறிவியல், எலும்பு நோய்கள் மற்றும் அதிர்ச்சி, மாற்று அறுவை சிகிச்சைகள் மற்றும் தாய் மற்றும் குழந்தை பராமரிப்பு உள்ளிட்ட எட்டு சிறப்பு மையங்கள் வளாகத்தில் அமைந்துள்ளன.