கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை பாதிப்பு தற்போது இந்தியாவில் சற்று குறையத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் ஒருநாள் தொற்று பாதிப்பு பல நாட்களுக்கு பின்பு 1 லட்சமாக குறைந்துள்ளது. இந்தச் சூழலில் இன்று நாட்டு மக்களுக்கு காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். அதில் சில முக்கியமான அறிவிப்புகளை பிரதமர் மோடி தெரிவித்தார். அவற்றில் சில முக்கியமான விஷயங்கள் என்னவெனில்,
- கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இந்தியாவின் சுகாதார கட்டமைப்புகள் சிறப்பாக வளர்ந்துள்ளது. இந்தியாவிலியே மருத்துவ வென்டிலெட்டர்கள், ஆக்சிஜன் உற்பத்தி உள்ளிட்டவை அதிகரிக்கப்பட்டது.
- 50-60 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத அளவிற்கு அத்துடன் இந்தியாவில் இரண்டு தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. தற்போது வரை 23 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
- கொரோனாவை வெல்ல நம்மிடம் உள்ள முக்கிய ஆயுதம் தடுப்பூசிதான்.
- வரும் ஜூன் 21-ஆம் தேதி முதல் இந்தியாவில் புதிய தடுப்பூசி கொள்கை கடைபிடிக்கப்பட உள்ளது.
- அதன்படி ஏற்கெனவே வழங்கிவந்த 50 சதவிகித தடுப்பூசிகளுடன் சேர்த்து மாநிலங்கள் வாங்கி வந்த 25 சதவிகிதத்தையும் மத்திய அரசே வாங்கித்தர உள்ளது.
- ஜூன் 21-ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும்.
- தனியார் மருத்துவமனை நிறுவனங்கள் 25 சதவிகித தடுப்பூசியை கொள்முதல் செய்து மக்களுக்கு செலுத்தலாம்.
- கடந்த ஆண்டு பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு 8 மாதங்கள் வரை உதவி அளிக்கப்பட்டது.
- அதேபோன்று இம்முறையும் வரும் நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகை நியாய விலை கடைகளில் 80 கோடி ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் அளிக்கப்படும்.
இவ்வாறு பல முக்கிய அறிவிப்புகளை பிரதமர் மோடி தனது உரையில் தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த வாரம் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் மக்கள் அனைவரும் மீண்டும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கைவிடக்கூடாது என்று எச்சரித்தது. ஏனென்றால் அவ்வாறு மக்கள் அலட்சியமாக இருக்கும் பட்சத்தில் கொரோனா மூன்றாவது அலை மிகவும் வேகமாக பரவி மிக விரைவில் உச்சத்தை அடையும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: தத்ரூப ஓவியங்களின் அரசன் ஓவியர் இளையராஜா கொரோனாவால் உயிரிழப்பு