PM Modi: பிரதமர் மோடி தனது 5 வெளிநாடுகளுக்கான பயணத்தில், முதலாவதாக கானாவை சென்றடைந்துள்ளார்.

கானா உடன் இந்திய ஒப்பந்தம்:

இந்திய பிரதமர் மோடி தனது 5 வெளிநாடுகளுக்கான பயணத்தில் முதலாவதாக கானா சென்றடைந்துள்ளார். அப்போது மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இருநாடுகளுக்கு இடையே அரிய கனிம வளங்களுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கவனிக்கப்படுகிறது. 

இந்தியாவில் சுற்றுச் சூழல் பாதிப்பை குறைப்பதற்காக எதிர்காலத்தில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், இதில் முக்கிய பங்கு வகிக்கும் அரிய வகை கனிமங்களை விநியோகிப்பதில் சீனா அதிக ஆதிக்கம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. அதன் ஆதிக்கத்தை குறைக்க கானா உடனான இந்தியாவின் புதிய ஒப்பந்தம் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடங்கிய பேச்சுவார்த்தை:

மேற்கு ஆப்ரிக்காவைச் சேர்ந்த நாடான கானாவை சென்றடைந்த பிரதமர் மோடி, உடனடியாக அந்நாட்டின் அதிபர் ஜான் ட்ரமானி மஹாமா உடன் விரிவான பேச்சுவார்த்தையை தொடங்கினார். இரு தலைவர்களுக்கு இடையேயான உயர்மட்ட குழுவின் பேச்சுவார்த்தையானது, அரிய வகை கனிம வளங்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்வது உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து விவாதித்தன. விளைவாக பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்துமாகின.

5 ஆண்டுகளில் இரட்டிப்பாக்க திட்டம்:

பேசுவார்த்தைகளுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, கானாவின் வளர்ச்சிப் பாதைக்கு உண்மையான நண்பனாக இந்தியா உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தார். மேலும், “இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தை அடுத்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். கானாவின் வளர்ச்சியில் இந்தியா பங்களிப்பாளர்களாக மட்டுமின்றி, அவர்களுடன் நாங்களும் சேர்ந்து பயணிக்க உள்ளோம்” என பிரதமர் மோடி தெரிவித்தார். இருநாடுகளுக்கு இடையே கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய மருத்துவம் உள்ளிட்ட பல துறைகள் சார்ந்த ஒப்பந்தங்கள் இருந்தாலும், அதில் இடம்பெற்ற அரிய கனிம வள ஒப்பந்தம் கானாவின் பொருளாதார முக்கியத்துவத்திற்காக மட்டுமின்றி, அது அனுப்பும் புவிசார் அரசியல் சமிக்ஞைக்காகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

சீனாவை பலவீனமாக்கும் முயற்சி:

மின்சார வாகனங்களுக்கான பேட்டரி, விண்ட் டர்பைன்ஸ் மற்றும் ஸ்மார்ட் ஃபோன்களை தயாரிக்க உதவும் அரிய கனிம வளங்களை ஏற்றுமதி செய்வதில், சர்வதேச அளவில் ஒற்றை பெரும்பான்மையாக சீனா திகழ்கிறது. இது இந்தியாவின் பசுமை தொழில்நுட்ப இலக்கினை அடைய சவாலாக திகழ்கிறது. அதோடு, அண்மையில் அமெரிக்காவின் சரிநிகர் வரிவிதிப்பால், அரிய கனிம வளங்களை ஏற்றுமதி செய்வதற்கு கடும் கட்டுப்பாடுகளையும் சீனா விதித்துள்ளது. இது  ஆட்டோமொபைல் துறையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானில் உள்ள பிரபல சூசுகி நிறுவனம் தனது கார் உற்பத்தியை, தற்காலிகமாக கடந்த மாதம் நிறுத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: Best Selling Car: க்ரேட்டாவிற்கே நாக்கு தள்ளுதே.. மீண்டும் முதலிடம், 34KM மைலேஜ், மிரட்டும் பட்ஜெட் கார் - 6 மாதத்தில் ஒரு லட்சம் யூனிட்

இந்நிலையில் தான், கானா உடனான இந்தியாவின் புதிய நட்புறவானது, அரிய கனிம வளங்களுக்கு சீனாவை மட்டுமே நம்பி இருக்கும் சூழலை மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்நாட்டின் புதிய விதிகளுக்கு எதிராக இந்தியா முன்னெடுக்கும் நேரடி நடவடிக்கைகளாகவே இந்த ஒப்பந்தம் பார்க்கப்படுகிறது.

கானாவில் கிடைக்கும் கனிமங்கள்:

கானாவில் பல்வேறு விதமான அரிய வகை கனிம வளங்கள் கிடைக்கின்றன. அதன்படி, மாங்கனீஸ், காப்பர், கிராஃபைட், டாண்டலும், இட்ரியம் மற்றும் ஸ்கேண்டியம் ஆகியவை அதிகளவில் சுரங்கங்களிலிருந்து வெட்டி எடுக்கப்படுகின்றன. இதில் மாங்கனீஸ், காப்பர் மற்றும் கிராஃபைட் ஆகியவை மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகள், மின்சார மோட்டார்கள் மற்றும் இதர பாகங்களை உற்பத்தி செய்வதற்காக பயன்படுத்தப்படுகின்றன. இதுபோக மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் காந்தங்களை உற்பத்தி செய்ய உதவும் நியோடியம், டிஸ்ப்ரோசியம், டெர்பியம் மற்றும் சமரியம் ஆகிய கனிம வளங்களும் கானாவில் கிடைக்கப் பெறுகின்றன. 


Car loan Information:

Calculate Car Loan EMI