நாடாளுமன்றத்துக்கு வெளியே காங்கிரஸ் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான பிரியங்கா காந்தி வத்ரா செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறும்போது, ’’பிரதமர் மோடி சபாநாயகரின் பின்னால் ஒளிந்திருக்கிறார்.

என்ன முட்டாள்தனம் இது?

நேற்று, 3 பெண் எம்.பி.க்கள் பிரதமர் மோடியின் இருக்கைக்கு முன்னால் நின்றிருந்தனர். அதனால் என்ன? இந்தக் காரணத்தால் பிரதமருக்கு இன்று அவைக்கு வர தைரியம் இல்லையா? என்ன முட்டாள்தனம் இது. இந்த அரசுக்கு விவாதம் நடத்த விருப்பம் இல்லை என்பதால், எந்த விவாதமும் நடக்கவில்லை. 

அப்பட்டமான பொய்

சபாநாயகரின் குற்றச்சாட்டு ஓர் அப்பட்டமான பொய். பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பதாக வெளியான தகவல் தவறு. அப்படி எந்தத் திட்டமும் இல்லை. சபாநாயகரை அவ்வாறு பேச வைத்திருக்கின்றனர்’’ என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

நடந்தது என்ன?

நாடாளுமன்றபட்ஜெட்கூட்டத்தொடர்நடைபெற்றுவரும்நிலையில்குடியரசுத்தலைவர்தீர்மானத்துக்குநன்றிதெரிவிக்கும்விவாதம்நடைபெற்றுவருகிறது. இதில்நேற்றுபிரதமர்மோடிகலந்துகொண்டுபேசவில்லை. இதுகுறித்துஎதிர்க்கட்சிகள்கடும்எதிர்ப்பைவெளிக்காட்டிஇருந்தன

இந்தநிலையில், பிரதமர்மோடிமீதுதாக்குதல்நடத்தகாங்கிரஸ்உள்ளிட்டஎதிர்க்கட்சிஎம்.பி.க்கள்திட்டமிட்டதாகவும்அதனால்தான்பிரதமர்மோடிபேசவில்லைஎன்றும்மக்களவைசபாநாயகர்ஓம்பிர்லாபரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்து இருந்தார்எனினும் அதனை காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.