பிஎம் கேர்ஸ் நிதியின் செயல்பாட்டில் அதிக வெளிப்படைத்தன்மையைக் கோரும் மனு மீது மத்திய அரசு டெல்லி உயர்நீதிமன்றத்தில் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
இது குறித்தான மத்திய அரசின் அறிக்கையில் தெரிவிக்கையில்,
பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரண (பி.எம்.கேர்ஸ்) நிதிக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் பொருந்தாது, ஏனெனில் இந்த சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட "பொது ஆணையமாக" அறக்கட்டளை தகுதி பெறவில்லை என்று மத்திய அரசு செவ்வாய்க்கிழமை டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது.
சட்டமன்றத்தால் உருவாக்கப்படவில்லை:
பி.எம் கேர்ஸ் நிதி இந்திய அரசியலமைப்பின் கீழ் அல்லது நாடாளுமன்றம் அல்லது மாநில சட்டமன்றத்தால் உருவாக்கப்பட்ட எந்தவொரு சட்டத்தாலும் உருவாக்கப்படவில்லை என்று பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இந்த அறக்கட்டளை உண்மையில் எந்தவொரு அரசாங்கத்திற்கும் அல்லது அரசாங்கத்தின் எந்தவொரு சார்பிற்கோ சொந்தமானதாகவோ, கட்டுப்படுத்தப்பட்டதாகவோ அல்லது நிதியளிக்கப்பட்டதாகவோ இல்லை. அறக்கட்டளையின் செயல்பாடுகளில் மத்திய அரசோ அல்லது எந்த மாநில அரசுகளோ நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த வகையிலும் கட்டுப்படுத்த முடியாது.
வெளிப்படைத்தன்மைக் கோரும் மனு
பிஎம் கேர்ஸ் நிதியின் செயல்பாட்டில் அதிக வெளிப்படைத்தன்மையைக் கோரும் மனு மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு ஒரு பக்க பதிலை தாக்கல் செய்தது.இது நீதிமன்றத்தை அதிருப்தியில் ஆழ்த்தியது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் மத்திய அரசு தாக்கல் செய்த பதிலைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட விரிவான பிரமாணப் பத்திரம் இதுவாகும்.
மத்திய உள்துறை அமைச்சரும், மத்திய நிதியமைச்சரும், டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ், முன்னாள் துணை சபாநாயகர் கரியா முண்டா ஆகியோரும் பி.எம்.கேர்ஸ் நிதியின் அறங்காவலர் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
பி.எம் கேர்ஸ் நிதி ஒரு அரசாங்க நிதியாக முன்னிறுத்தப்பட்டுள்ளது என்றும், "துணை ஜனாதிபதி போன்ற அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் மாநிலங்களவை உறுப்பினர்களை நன்கொடை வழங்குமாறு கோரியுள்ளனர்" என்றும் மனுதாரர்கள் தரப்பில் வாதிட்டாலும், பி.எம் கேர்ஸ் நிதியை "பொது அறக்கட்டளை" என்று அழைக்கும் வாதத்தை அரசாங்கம் எதிர்த்தது, இது தன்னார்வ நன்கொடைகளை மட்டுமே ஏற்றுக்கொள்கிறது என்றும் மத்திய அரசு வாதம் வைத்தது.
பிஎம் கேர்ஸ் நிதி என்பது மத்திய அரசின் வேலை அல்ல, அதிலிருந்து நிதி அல்லது நிதியைப் பெறவில்லை. "பி.எம் கேர்ஸ் நிதி பி.எம்.என்.ஆர்.எஃப் பாணியில் நிர்வகிக்கப்படுகிறது, ஏனெனில் இரண்டும் பிரதமரால் தலைமை தாங்கப்படுகின்றன," என்று அது கூறியது.
ஏப்ரல் 1, 2020 அன்று அமைக்கப்பட்ட பிஎம் கேர்ஸ் நிதியானது, கோவிட் -19 தொற்று போன்ற அவசரகால சூழ்நிலைகளை சமாளிக்க நன்கொடைகளைப் பெறுகிறது என கூறப்படுகிறது.
Also Read: Economic Survey 2023: பொருளாதார ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள்….