2023 - 24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் 3ஆவது முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. டிஜிட்டல் ஆவணங்கள் மூலம் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.
ஏற்கனவே நான்கு முறை மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ள நிர்மலா சீதாராமன், தொடர்ந்து ஐந்தாவது முறையாக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள சூழலில், இன்று தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய அரசின் பட்ஜெட் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு தாக்கல் செய்ய உள்ள கடைசி முழு நேர பட்ஜெட் இது என்பதால், நடுத்தர மக்களை கவரும் விதமான பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே இந்தியாவிலேயே தயார் செய்யப்பட்ட டேப்லட் (Tab) மூலம் டிஜிட்டல் வடிவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த டேப், தங்க நிற தேசியச் சின்னம் பொறிக்கப்பட்ட, சிவப்பு நிற உறையால் மூடப்பட்டு இருக்கும். இதில் உள்ள டிஜிட்டல் ஆவணங்கள் மூலம் பட்ஜெட் உரை வாசிக்கப்படும். இந்த உறை Bahi Khata வடிவில் தயார் செய்யப்பட்டுள்ளது.
Bahi Khata என்றால் என்ன?
இது வரவு செலவுப் புத்தகம் ஆகும். இதில், நிதி பண பரிவர்த்தனை மட்டும் பதிவு செய்யப்படும் லெட்ஜர் ஆவணம் ஆகும்.
2018 வரை பாரம்பரிய முறை
2019ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, மத்திய பட்ஜெட் அறிக்கை பாரம்பரிய பிரீஃப்கேஸில்தான் கொண்டு வரப்பட்டது. ஆனால், 2019ஆம் ஆண்டு முதல், நிர்மலா சீதாராமன் மத்திய நிதி அமைச்சராக ஆன பிறகு, சிவப்பு நிறத்தினாலான தேசிய சின்னம் பொறிக்கப்பட்ட பையில் பட்ஜெட் அறிக்கை கொண்டு வரப்படுகிறது.
2021 முதல் காகிதமில்லா பட்ஜெட்
கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு, 2021-22 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை முதல்முறையாக காகிதம் இல்லா பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து 2023 - 24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் 3ஆவது முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. டிஜிட்டல் ஆவணங்கள் மூலம் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.
2014ஆம் ஆண்டு, உலகின் 10 பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்தது. மோடியின் ஆட்சியின் கீழ் பிரிட்டனை பின்னுக்கு தள்ளி உலகின் 5ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்தது.
அதேபோல, வரும் 2027ஆம் ஆண்டுக்குள் ஜெர்மனியையும் 2029ஆம் ஆண்டுக்குள் ஜப்பானையும் வளர்ச்சி விகித்தில் பின்னுக்கு தள்ளி உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட் குறித்த லைவ் அப்டேட்ஸ்க்கு... இங்கே கிளிக் செய்யவும்... https://tamil.abplive.com/business/budget/budget-2023-live-updates-union-budget-2023-highlights-in-tamil-fm-nirmala-sitharaman-speech-live-budget-latest-news-key-points-99239/amp