விமானத்தில் தேசிய மகிளா காங்கிரஸ் செயல் தலைவர் நெட்டா டிசோசாவும், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியும் வாக்குவாதம் செய்யும் வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 






டெல்லியில் இருந்து கவுஹாத்தி விமானத்தில் சென்ற விமானத்தில் இருவரும் பயணித்தனர். விமானம் தரையிறங்கும் நேரத்தில், திடீரென தனது போனை எடுத்து வீடியோ எடுத்த தேசிய மகிளா காங்கிரஸ் செயல் தலைவர் நெட்டா டிசோசா, அங்கிருந்த ஸ்மிருதி இரானியிடம் பெட்ரோல் டீசல் விலை உயர்வு பற்றி கேட்க, நீங்கள் பயணிகளுக்கான வழியை அடைத்து நிற்கிறீர்கள் என்று அவர் கூறுகிறார்.


பொய் சொல்லாதீங்க..


இதற்கு பதிலளித்த நெட்டா டிசோசா அனைவரும் இந்தப் பிரச்னையை (பெட்ரோல் டீசல் விலை உயர்வு) எதிர்கொண்டு நிற்கிறார்கள் என்று கூறுகிறார். தொடர்ந்து ஸ்மிரிதி இரானியிடம், கேஸ், ஸ்டவ் இல்லாமல் மக்கள் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று நெட்டா குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் பொய் கூறாதீர்கள். தவறான பரப்புரையை செய்யாதீர்கள் என்று கூறுகிறார். இப்படி சென்று கொண்டிருந்த வாக்குவாதம், அப்படியே அவர்கள் வெளியே செல்லும் வரை நீள்கிறது. இந்த வீடியோவை நெட்டா டிசோசா தனது சமூகவலைதள பக்கங்களில் பதிவிட்டு இருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண