உலகளவில் இதுவரை கண்டிராத, கேட்டிராத வகையில், மகாராஷ்டிராவில் உள்ள சஹ்யாத்ரி புலிகள் காப்பகத்தில் (STR) வங்காள மானிட்டர் பல்லியை (இந்திய உடும்பு) பாலியல் பலாத்காரம் செய்ததாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சஹ்யாத்ரி புலிகள் காப்பகமானது சதாரா, சாங்லி, கோலாப்பூர் மற்றும் ரத்னகிரி ஆகிய நான்கு மாவட்டங்களை உள்ளடக்கியது. இந்தநிலையில், கோத்தானேவில் உள்ள காபா பகுதியில் உள்ள சஹ்யாத்ரி புலிகள் காப்பகத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த நான்கு பேர் அங்கிருந்த வங்காள மானிட்டர் பல்லியை வன்கொடுமை செய்துள்ளனர்.
இதையடுத்து, முதலில் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த வனத்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில், சந்தீப் துக்ராம், அக்ஷய் சுனில், ஜனார்தன் காம்டேகர் மற்றும் பவார் மங்கேஷ் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர். சந்தேகத்தின் பேரில் மர்மநபர்களின் செல்போன்களை சோதனை செய்ததில் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
அந்த செல்போனில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நான்கு பேரும் வங்காள மானிட்டர் பல்லியை பாலியல் வன்கொடுமை செய்ததும், அதை வீடியோவாகவும் பதிவிட்டுள்ளனர். இதன் காரணமாக இவர்கள் நான்கு பேரும் பல்லியை வன்கொடுமை செய்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து, சந்தீப் துக்ராம், அக்ஷய் சுனில், ஜனார்தன் காம்டேகர் மற்றும் பவார் மங்கேஷ் ஆகியோர் வனப்பகுதியில்கொங்கனில் இருந்து கோலாப்பூரின் சந்தோலி கிராமத்திற்கு வேட்டையாட சென்றுள்ளனர். சிசிடிவி காட்சிகளை ஆராய்ச்சி செய்தபோது, இந்த உண்மை வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தொடர்ந்து, இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த இருக்கின்றனர்.
வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972ன் கீழ், வங்காள மானிட்டர் பல்லி, அறியப்படாதவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இனமாகும். இவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரியவந்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்