மத்திய பிரதேசத்தில் இளம் பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கொடூரமாக தாக்கும் பெண்கள் :
மத்தியபிரதேச பகுதியில் பிரபல பீட்சா கடையில் வேலை செய்யும் இளம் பெண் ஒருவரை நான்கு பெண்கள் சேர்ந்து சரமாரியாக தாக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த வீடியோவில் பிரபல பீட்சா கடையின் உடை அணிந்த இளம்பெண்ணை கிட்டத்தட்ட அதே வயதுடைய நான்கு பெண்கள் கம்பு , கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாக தாக்குகின்றனர். அடித்ததில் அந்தப்பெண் அந்த இடத்திலேயே கீழே விழுகிறார்.அதன் பின்னரும் பெண் ஒருவர் அவரை கடுமையாக தாக்குகிறார். அங்கிருந்து வலியால் துடித்த பெண் , வேடிக்கை பார்க்கும் பக்கத்து வீட்டுகாரர்களிடம் தஞ்சம் அடைகிறார். மீண்டும் அந்த பெண்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை அடிக்க பாய்கின்றனர். அத்துடன் அந்த வீடியோ நிறைவடைகிறது.
காரணம் என்ன ?
இது குறித்து அந்த நான்கு பெண்களிடம் விசாரித்த பொழுது. பாதிக்கப்பட்ட பெண் தங்கள் நால்வரையும் முறைத்து பார்த்துக்கொண்டிருந்ததாகவும். பின்னர் ஏன் முறைக்கிறாய் என கேட்டதற்கு அந்த பீட்சா டெலிவரி பெண் தங்களை முதலில் தாக்கியதாகவும் அதன் பின்னர்தான் நாங்கள் தாக்கினோம் என தெரிவித்துள்ளனர்.
குடிமகனை தாக்கிய காவலர்:
இப்படியான மற்றுமொரு செயல் ஆந்திர பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. குடிபோதையில் இருந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படும் நபர் ஒருவரை போக்குவரத்து காவலர் எட்டி உதைத்து சரமாரியாக தாக்குகிறார். அது குறித்து காவல்துறை விளக்கம் அளித்தபொழுது அந்த நபர் , அரசு பேருந்து ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் அதனை விசாரித்த காவலரை , தாக்கப்பட்ட நபர் ஆபாசமாக பேசியதாகவும் அதனால் காவலர் அவரை கொடூரமாக தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.