கேரள மாநிலம் ஆலப்புழா அருகே ஒரு கோழி 6 மணி நேரத்தில் 24 முட்டைகளை போட்ட அதிசய சம்பவம் நடந்துள்ளது. இதை வேடிக்கை பார்க்க ஏராளமான மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 


சின்னு கோழி


கேரள மாநிலம் ஆலப்புழா அருகே அம்பலப்புழா பகுதியில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அம்பலப்புழாவை சேர்ந்தவர்தான் பிஜுகுமார் என்பவர். இவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு வங்கியில் கடன் வாங்கி 20க்கும் மேற்பட்ட கோழிகளை வாங்கி ஒரு சிறிய கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார். அதில் ஒரு கோழி பிஜுகுமாரின் மகளுக்கு பிடித்த கோழியாக இருந்துள்ளது. அதனால் அந்த கோழிக்கு சின்னு என்று செல்லமாக பெயரிட்டு பாசமாக வளர்த்து வந்துள்ளார்.



காலை தூக்கி நடந்த சின்னு


இந்நிலையில் சின்னு கோழி நேற்று திடீரென ஒரு அதிசய சம்பவத்தை நிகழ்த்தியது. அதன்படி நேற்று அதிகாலை முதல் தனது ஒரு காலை சற்று தூக்கி தூக்கி நடந்து கொண்டிருந்தது. ஏதாவது அடிபட்டிருக்கலாம் என்று கருதி பிஜுகுமார் கோழியின் காலில் தைலத்தை தடவி விட்டு பார்த்திருக்கிறார். பின்னர் காலை சுமார் 8.30 மணி அளவில் அந்த சின்னு கோழி ஒரு முட்டை ஒன்றை போட்டது.


தொடர்புடைய செய்திகள் : June Month Rasi Palan: ஜூன் மாதம் எந்த ராசிக்கு அமோகம்...! எந்த ராசிக்கு அவஸ்தை..! முழு ராசிபலன்கள்...!


வரிசையாக முட்டைகள்


சிறிது நேரத்திலேயே அடுத்தடுத்து முட்டைகளை போடத் தொடங்கியது. இந்த தகவல் அறிந்ததும் அந்த பகுதியினர் ஏராளமானோர் அதிசய கோழியை பார்ப்பதற்காக அங்கு திரண்டனர். அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தபோதே சின்னு கோழி வரிசையாக முட்டைகளை போட்டுக் கொண்டிருந்தது.



மொத்தம் 24 முட்டைகள்


காலை சுமார் 8.30 மணிக்கு முட்டை போடத் தொடங்கிய கோழி, பிற்பகல் 2.30 மணிக்குத் தான் முட்டை போடுவதை நிறுத்தியது. இந்த 6 மணி நேரத்திற்குள் 24 முட்டைகளை போட்டது. இந்த தகவல் அந்த பகுதியில் காட்டுத் தீ போல பரவியது. இதையடுத்து அதிசய கோழியை பார்ப்பதற்காக ஊர் மக்கள் பிஜுகுமார் வீட்டில் திரண்டனர்.


என்ன காரணம்?


இதுகுறித்து திருச்சூரில் உள்ள கால்நடை பல்கலைக்கழக உதவி பேராசிரியர் வினோத் கூறுகையில், ஒரு கோழி 6 மணிநேரத்தில் 24 முட்டைகளை போடுவது என்பது மிகவும் அதிசயமான சம்பவமாகும். இது தொடர்பாக ஆராய்ச்சி செய்த பிறகே என்ன காரணம் என்பது குறித்து கூறமுடியும் என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.