பெங்களூரூவில் உள்ள காபான் பூங்காவில் (Cubbon Park) நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள், பூங்காவிற்கு வருவபர்கள் தங்களது செல்லப்பிராணிகளை குறிப்பாக நாய்களை அழைத்துவர அடுத்த மாதம் 1-ஆம் தேதி முதல் தடை வித்திக்க இருப்பதாக கர்நாடக மாநில தோட்டக்கலை துறை (Karnataka Horticulture Department) அறிவித்துள்ளதற்கு அம்மாநிலத்தில் பல்வேறு எதிர்ப்புகள் எழுந்துள்ளது.


இந்தப் பூங்காவில் ஏற்கனவே உள்ள நடைமுறைகளை செல்லப்பிராணியான நாய்களை அழைத்துவரும்போது பின்பற்றுவதில்லை என்றும், இதனால் பூங்காவின் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுதாகவும் பூங்காவிற்கு வருபவர்கள் புகார் அளித்துள்ளனர். இதன் காரணமாக விரைவில் காபான் பூங்காவில் நாய்களை அழைத்துவர அனுமதில் இல்லை என நிர்வாகம் தெரிவிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இதற்கு சமூக, விலங்குகள் நலன் சார்ந்த ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.




இன்றைக்கு பலரும் நாய்களுடன் நடைப்பயிற்சிக்கு செல்வது வழக்கமாகிவிட்டது. பெருநகரங்களில் தங்களது நாய்களுடன் வாக்கிங் செல்வது, நாய்களை வெளியே அழைத்து செல்வது உள்ளிட்டவைகளை பார்க்க முடியும். செல்லப்பிராணிகளுக்கு பலரும் தங்களால் முடிந்தளவிற்கு நல்ல சூழலை உருவாக்க வேண்டும் என்பது நோக்கமாக உள்ளது. மேலும், நாய்கள் தங்களது நட்புகளைச் சந்தித்து ஜாலியாக விளையாடும் என்பது பலரின் கருத்தாக இருக்கிறது.


கபான் பூங்காவில் நாய்களை தடை செய்ய வேண்டும் என்று 300 பேரிடமிருந்து புகார்கள் பெற்றிருப்பதாக தோட்டக்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. பூங்காவில் நாய்களை திரிய விடுவதால், அங்கு வரும் மக்களுக்கு தங்களை ஏதும் செய்துவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளதாகவும், பூங்காக்களில் நாய்கள் சுற்றித் திரிவதால் எங்களால் அச்சமின்றி நடமாட முடியவில்லை என்றும் புகாரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தப் பூங்கா மிகவும் பிரபலமானது. இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் பலவேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டிருக்கும். பராமரிப்பு பணிகள் தினமும் மேற்கொள்ளப்படும். அப்படியிருக்க, நாய்களை அழைத்துவருபவர்கள் அதன் கழிவுகளை அகற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.




இந்த நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள விலங்கு ஆர்வலர்கள், “ யாரோ சிலர் செய்த தவறுக்கு நாய் அழைத்து வரவே தடை விதிப்பது சரியானதல்ல. மாறாக, தோட்டக்கலை துறை முறையாக விதிமுறைகளை பூங்காக்களில் ஆங்காங்கே மக்களுக்குத் தெரியும்படி அமைக்கலாம். விதிகளை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கலாம். அபராதம் விதிக்கலாம். ஆனால், நாய்களுக்கு தடை விதிப்பதை ஏற்க முடியாது.” என்கின்றனர்.


Also Read | Plastic Ban Items: இயர் பட்ஸ், பிளாஸ்டிக் கப்; எந்தெந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை?- முழு விவரம்


கபான் பூங்காவிற்கு வழக்கமாக தனது நாயுடன் நடைப்பயிற்சிக்கு வருபவர் கூறுகையில், நாய்கள் ஓடி ஆடி விளையாடுவது அவசியம், நாய்களும் மற்ற நண்பர்களான நாய்களுடன் விளையாடுவதற்காகதான் என் நாய்க்குட்டியை இங்கே அழைத்து வருகிறேன். ஆனால். அதற்கு இனிமேல் அனுமதி இல்லை என்றால் எப்படி? இதனால் பலரும் இங்கு வருவதையே தவிக்கும் நிலைக்கூட ஏற்படலாம்.” என்றார்.


கபான் பூங்காவில் நாய் அழைத்துவர தடை எப்போது அமலுக்கு வரும் என்று கேட்கப்பட்டதற்கு, தோட்டக்கலை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இதுகுறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்றும், பொதுமக்களின் கருத்துகளை அறிந்த பின் முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். ஆனால், துறையில் உள்ள குழுவினர், கபான் பூங்காவில் நாய்களுக்கு தடை விதிப்பதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஒருவர் செய்த தவறுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்கக்கூடாது என்பது கோரிக்கையாக உள்ளது.