நாடாளுமன்ற குளிர்காலத்தொடரில் பெகாசஸ் விவகாரத்தைப்பற்றி இம்முறை பேசுவதற்கு இடமே இல்லை என மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நவி கூறியுள்ளார். மேலும் இதற்கு காங்கிரஸ் கட்சியினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் நாட்டு பெகாசஸ் மென்பொருள் மூலமாக நாட்டில் உள்ள பத்திரிகையாளர்கள், ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள், நீதிபதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் உளவு பார்க்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. மேலும் இது தொடர்பாக பல்வேறு விவாதங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. மேலும் சென்ற முறை நாடாளுமன்ற விவாதத்தின் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில் தான், இந்தாண்டு நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் வரும் நவம்பர் 29 ஆம் தேதி முதல் டிசம்பர 23 ஆம் தேதி வரை நடத்த மத்திய அமைச்சரவைக்குழு பரிந்துரைத்துள்ளது. இந்த தொடரில் கடந்த முறையைப்போன்ற பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரத்தை மீண்டும் எழுப்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் தான் இதுக்குறித்து மாநிலங்களவை துணை தலைவரும், மத்திய சிறுபான்மைத்துறை அமைச்சருமான முக்தர் அப்பாஸ் நக்வி, மக்களவை சபாநாயகர், மாநிலங்களவை தலைவர் முடிவில் அடிப்படையில் நாட்டில் தற்போது சூழலில் நிலவும் அனைத்து விவகாரங்களையும் விவாதிக்க அரசு தயாராக உள்ளது. மேலும் கடந்த ஆண்டுகளில் நாடாளுமன்ற தொடர்களில் காங்கிரசின் செயல்பட்ட விதத்தைக்கவனிக்க வேண்டும் எனவும், ஜனநாயக விவாதத்துக்கு இடம் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பெகாசஸ் விவகாரத்தில் உண்மை எதுவும் இல்லாதப்போது, விவாதத்தின் அடிப்படையில் பேசினால் பல கதைகள் தான் வளரும். இதனை வைத்து நடவடிக்கையை சீர்குலைக்க விரும்புவது நியாயமில்லை. அதனால் இந்த தொடரில் இந்த பிரச்சனையைப் பற்றி விவாதிப்பதற்கு எதுவும் இல்லை. எனவே நாடாளுமன்றத்தில் இம்முறை பெகாசஸ் பற்றி பேசுவதற்கு இடம் அளிக்கப்படாது எனவும், இதனை ஒரு மனதாக அனைவரும் ஏற்றுக்கொள்ள நிலையில்,காங்கிரஸ் எந்த நிலைப்பாட்டில் இருந்தாலும் அதனை கருத்தில் எடுத்துக்கொள்ளப்போவதில்லை எனவும் மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.
இதோடு கடந்த முறை அனைத்துக் கட்சிக்கூட்டம், சபை அலுவல் குழு கூட்டம் ஆகிய நடத்தப்பட்டு பல்வேறு விவாதங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்ட நிலையில் எதிர்க்கட்சிகள் பெகாசஸ் பிரச்சனையை கையில் எடுத்துப்போராடினர். அப்போது சில மாநிலங்களில் சட்டமன்றத்தேர்தலை சந்தித்தன. தற்போதும் 5 மாநிலங்களில் சட்டமன்றத்தேர்தல் வர விருப்பதினால் தான் காங்கிரஸ் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறினார். சென்ற முறைப்போன்ற இப்போதும் எதிர்க்கட்சிகள் பிரச்சனையை எழுப்பினால் நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும் என்பதால் பெகாசஸ் பற்றி பேசுவதற்கு இடமளிக்க கூடாது என தெரிவித்துள்ளார்.