பெகாசஸ்  மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்ட புகாரில் 3 பேர் கொண்ட சிறப்பு வல்லுநர் குழு விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிபுணர் குழுவின் விசாரணையை உச்சநீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும் என்றும் தலைமை நீதிபதி ரமணா கூறியுள்ளார். 


மேலும், பத்திரிகையாளர் மட்டுமின்றி அனைத்து குடிமக்களின் தனிநபர் ரகசியங்களும் காக்கப்பட வேண்டும் என்றும், தொழில்நுட்ப வளர்ச்சி எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு தனிமனித உரிமைகளும் முக்கியம் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. 


 






முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ரவீந்திரன் தலைமையில் ரவீந்திரன் தலைமையில் பல்துறை கொண்ட குழு விசாரணை நடத்தும். இணைய குற்றம் மற்றும் தடவியல் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் இந்தக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். இணைய குற்றத் தடுப்பில் நிபுணத்துவம் பெற்ற முன்னாள் உளவுத்துறை தலைவர் அலோக் ஜோஷி, சைபர் செக்யூரிட்டி மற்றும் டிஜிட்டல் தடயவியல் நிபுணரான நவீன் குமார் சவுத்ரி, கேரளாவைச் சேர்ந்த பொறியியல் துறை பேராசிரியர் பிரபாகரன் ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.