ராஜஸ்தானில்  4 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த ஒரு மயிலின் மரணத்தை ஏற்கமுடியாமல் தவித்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. இறுதிசடங்கிற்காக எடுத்துச்செல்லும்போது பின் தொடரும் மயிலின் ஏக்கம் அனைவரையும் கண்கலக்க வைக்கிறது.


மனிதனாக இருந்தாலும் சரி, ஐந்தறிவு ஜீவ ராசிகளாக இருந்தாலும் சரி நம்முடன் வாழ்ந்து வந்த ஒருவரின் மரணத்தை நினைத்தாலே மனதெல்லாம் பதறும். வாழ்வில் அதை விட கொடுமையான விஷயம் இல்லை வேறொன்றும் இருக்காது. என்ன தான் மற்றவர்களிடம் சிரித்துப் பழகினாலும் நம்முடன் ஒருவர் இல்லாதது நம்மை ரணமாக்கிக்கொண்டே இருக்கும். வாழ்நாள் முழுவதும் பல நினைவுகளைச் சுமந்து செல்ல வைக்கும். இது மனிதர்களுக்கு மட்டும் இல்லை, பறவைகள், விலங்குகள் போன்ற ஐந்தறிவு ஜூவ ராசிகளுக்கும் தான். இப்படித்தான் ராஜஸ்தானில் 4 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த மயில் தன்னுடன் இருந்த மற்றொரு மயிலை பிரிய முடியாமல் செய்த செயல் பார்ப்போரைக்கண்கலக்க வைக்கிறது. அப்படி என்ன செய்தது தெரியுமா? நீங்களே இந்த வீடியோவைப் பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்!






ராஜஸ்தானில் மாநிலம் குசேராவைச்சேர்ந்த ஸ்ரீ ராம்ஸ்வரூப் பிஷ்னோய் என்பவரது வீட்டில், கடந்த நான்கு ஆண்டுகளாக இரண்டு மயில்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளது. இந்நிலையில் உடல்நிலைக்காரணமாக இரண்டு மயில்கள் ஒன்று எதிர்பாராதவிதமாக உயிர் இழந்தது. இதனையடுத்து உயிரிழ்ந்த மயிலின் உடலை துணியில் வைத்து, இறுதிச்சடங்கிற்காக எடுத்துச்செல்லும் போது மற்றொரு மயில் அவர்களின் பின்னே செல்கிறது. மரணத்தையும், பிரிவையும் தாங்கமுடியாமல் ஏக்கத்துடன்  மயில் செல்லும் வீடியோ அனைவரையும் கண்கலக்க வைக்கிறது. பொதுவாக பிரிவு என்பது அனைத்து ஜீவராசிகளுக்கும் ஒன்று தான் என்பதைத் தெளிவாக இந்த வீடியோ வெளிப்படுத்துகிறது.










இந்த வீடியோவை ஐஎப்எஸ் அதிகாரி ப்ரவீன்குமார், தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டுவருகின்றனர். குறிப்பாக “ எந்தவொரு மரணத்தையும் ஆரம்ப நாள்களில் அன்புக்குரியவர்களை மறப்பது மிகவும் கடினமாக இருக்கும் என்பதை இந்த சிறிய கிளிப் வெளிப்படுத்துகிறது. நெஞ்சை ரணமாக்குகிறது எனவும் பதிவிட்டுள்ளார். மேலும் வண்ணமயமான மயிலின் அழகைப்பார்ப்பதே ஒரு தனி ரசனை எனவும் பதிவுகளை டிவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.