சுங்கச்சாவடிகளில் நிறுத்திப் பணம் செலுத்தும் காலம் போய் மக்கள் அனைவரும் ஆன்லைன் கட்டண முறையாக ஃபாஸ்டேக்-க்கு மாறினார்கள். ஆனால் அதுவும் விரைவில் கடந்த காலத்தின் ஒரு விஷயமாக மாறும் எனக் கூறப்படுகிறது. அதாவது சுங்கவரி வசூலிப்பதற்கான புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது.
ஜிபிஎஸ் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுங்கவரியை விதிக்க மத்திய அரசு உத்தேசித்துள்ளது. இந்த புதிய முறையை சோதிக்கும் முன்னோடி திட்டம் இந்தியாவில் தற்போது நடந்து வருவதாக ஆதாரங்கள் கூறுகின்றன.


இந்த முறையின்படி, ஒரு கார் நெடுஞ்சாலையில் எத்தனை கிலோமீட்டர் பயணிக்கிறது என்பதைப் பொறுத்து கட்டணம் செலுத்தப்படும். எனவே, ஒரு நபர் ஒரு நெடுஞ்சாலை அல்லது விரைவுச்சாலையில் கடக்கும் தூரத்தின் அடிப்படையில் சுங்கவரி செலுத்த வேண்டும்.





மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, கடந்த மார்ச் மாதம், மக்களவையில் பேசுகையில், நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை ஓராண்டுக்குள் அரசு அகற்றும் என்று கூறினார்.


கூடுதலாக, சுங்கச்சாவடிகள் முற்றிலும் ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண வசூல் முறையுடன் மாற்றப்படும் என்றும் அவர் கூறினார். நகரும் வாகனங்களுக்கு ஜிபிஎஸ் இமேஜிங் மூலம் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.


தற்போது, ​​நெடுஞ்சாலையில் ஒரு வாகனம் எத்தனை கிலோமீட்டர்கள் பயணிக்கிறது என்பதன் அடிப்படையில்தான் டோல் கட்டணம் கணக்கிடப்படுகிறது.
ஆனால், ஐரோப்பிய நாடுகளில் ஜிபிஎஸ்-அடிப்படையிலான அணுகுமுறை வெற்றியடைந்துள்ளதால், இந்தியாவிலும் இதை பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முன்னோடி திட்டம் சோதனை செய்யப்பட்டு வருகிறது.


தற்போது, ஒரு சுங்கச்சாவடியில் இருந்து மற்றொரு சுங்கச்சாவடிக்கு உள்ள முழு தூரத்திற்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு வாகனம் முழுத் தூரத்தையும் பயணிக்காமல், வேறு இடத்தில் பயணத்தை முடித்துக் கொண்டாலும், கட்டணம் முழுமையாக செலுத்தப்பட வேண்டும்.


ஜெர்மனியில், பெரும்பாலான வாகனங்களில் செயற்கைக்கோள் மூலம் அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. ஒரு வாகனம் கட்டணம் வசூலிக்கப்படும் பகுதிக்குள் நுழையும் போது, வரி கணக்கீடு தொடங்குகிறது.


அதிவேக நெடுஞ்சாலையில் இருந்து சுங்கவரி இல்லாத சாலைக்கு வாகனம் மாறியவுடன் பயணித்த தூரத்திற்கான கட்டணம் கணக்கில் இருந்து கழிக்கப்படும்.


இதுபோன்ற புதிய முறையை இங்கே அமல்படுத்துவதற்கு முன் போக்குவரத்துக் கொள்கையும் மாற்றப்பட வேண்டும். இந்த முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்பட்டால் நாடு முழுவதும் 1.37 லட்சம் ஆட்டோமொபைல்கள் பாதுகாக்கப்படும்.


2016 இல் அறிமுகப்படுத்தப்பட்ட FASTagகள், மின்னணு முறையில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்துவதை எளிதாக்குகின்றன. இந்த டேக்களை கட்டாயமாக்குவதால் டோல் பிளாசாக்கள் வழியாக போக்குவரத்து சீராக நகர்கிறது என்பதற்கு உத்தரவாதம் அளிக்க உதவும்.