உத்தரப் பிரதேசம் லலித்பூரைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவர், கோபத்தில் ஏழை சிறுவனின் மூக்கை கடித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 


ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுவன் சனிக்கிழமை இரவு உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சைக்காக ஜான்சி மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.


 






பாதிக்கப்பட்ட சிறுவனின் பெயர் அபய் நாம்தேவ் என தெரிய வந்துள்ளது. வீட்டில் உதவியாளராக வேலை செய்கிறார். ஒரு அற்ப விஷயத்திற்காக கோபமடைந்த அரசியல்வாதி சிறுவனின் மூக்கைக் கடித்துள்ளார்.


இதுகுறித்து சிறுவனின் குடும்பத்தினர் இதுவரை புகார் அளிக்காததால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


இதுகுறித்து எஸ்பி லலித்பூர் நிகில் பதக் கூறுகையில், "குற்றம் சாட்டப்பட்டவர் சச்சின் சாஹு என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது" என்றார்.


 






அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகள் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில்தான், பெண் ஒருவரை தகாத வார்த்தைகளை சொல்லி பாஜக நிர்வாகி மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.


சில நாட்களுக்கு முன்பு, நொய்டாவில் கிராண்ட் ஓமாக்ஸ் சொசைட்டியில் பாஜக நிர்வாகி தியாகிக்கும் பெண் ஒருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. சட்டவிரோதமாக கட்டிடத்தை கட்டியதாக தியாகி மீது குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் அந்த பெண் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். 


இந்த சம்பவத்தின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலானது. தியாகி அந்த பெண்ணை தகாத வார்த்தைகளை சொல்லி திட்டுவதும் தாக்குவதும் அதில் பதிவாகியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண