பெண்களுக்கு அளிக்கப்படுவது போல, ஆண்களுக்கும் ஃபைசர் (Pfizer) இந்தியா நிறுவனம் பேறுகால விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. 


உலகளவில் பணி இடங்களில் பேறுகால விடுமுறை வழங்கப்படும் வழக்கம் தொடர்ந்து வருகிறது. பேறுகாலத்தில் பெண்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், குழந்தை வளர்ப்பில் ஆண்களுக்கும் பெரும் பங்கு இருப்பது என்பதை ஊக்குவிக்கவும் இந்த நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 


இந்தாண்டு ஜனவரி, 1- ஆம் தேதி முதல் பேறுகால விடுமுறை பாலிசி நடைமுறையில் இருக்கும் என்றும் பைசர் நிறுவனம் அறிவித்துள்ளது. 


இதன்படி, தந்தையாகும் ஆண்களுக்கு, 12 வாரங்கள் வரை பேறுகால விடுமுறை அளிக்கப்படும். 


மேலும், பேறுகால விடுமுறையில் பாகுபாடு காட்டுவது முறையானது இல்லை என்றும் இந்நிறுவனம் கருதுவதாகவும் தெரிவித்துள்ளது.


பைசர் நிறுவனம் உலகளவில் இயங்கி வரும் ஃபார்மா மெடிக்கல் துறை சார்ந்ததாகும். இது இரண்டு ஆண்டுகளாக அதிகபட்சமாக ஆறு வாரங்கள், குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் பணியாளர்களுக்கு விடுமுறை எடுத்துக்கொள்ளும் அளவுக்கு வசதிகளை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. 


மெடிக்கல் ப்ளான், குழைந்தைப் பேறு பிரச்சினை தொடர்பான சிகிச்சைகளுக்கு தேவையான விடுமுறை, டெலிமெடிசன் வசதிகள் உள்ளிட்டவைகளை இந்நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு ஏற்கனவே வழங்கி வருகிறது. 


ஆண்களுக்கும் பேறுகால விடுமுறை குறித்து நிர்வாக குழுவில் உள்ள இயக்குநர் ஷில்பி சிங் கூறுகையில், “ ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் பேறுகால விடுமுறை அளிக்க வேண்டும் என்பதை நாங்கள் விரும்புகிறோம்.” என்று கூறியுள்ளார். 


பணியிடத்தில் முற்போக்கான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றும், பணியாளர்களின் உரிமைகள் மற்றும் நலனை கவனத்தில் செயல்படுவதே நிறுவனத்தின் நோக்கமாக இருக்க வேண்டுமெ என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளோம் என்றும் நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த 12 வாரங்கள் பேறுகால விடுமுறை திட்டம் தந்தைகள், தங்கள் மனையுடந் ஆரோக்கியமான நேரத்தை செலவிடவும், குழந்தையின் வருகையில் வரவேற்கவும், பெற்றோராக கடமையாற்றவும் இது உதவும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றும் இயக்குநர் தெரிவித்துள்ளார்.