ஏர் விஸ்தாரா விமானத்தில் பயணித்த பயணி ஒருவர், விமானத்தில் தனக்கு அளிக்கப்பட்ட பேக் செய்யப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருப்பதாக ட்விட்டரில் இன்று பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். நிகுல் சோலங்கி என்ற பயணி, "ஏர் விஸ்தாரா உணவில் சிறிய கரப்பான் பூச்சி இருந்தது" என்று ட்வீட் செய்துள்ளார்.


பயணத்தின் போது தான் சாப்பிட்ட இரவு உணவின் இரண்டு படங்களை சோலங்கி தலைப்பு ஒன்று வைத்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். ஒரு புகைப்படத்தில் இட்லி, சாம்பார் மற்றும் உப்புமா இருப்பதை பார்க்கலாம். ஜூம் செய்யப்பட்ட இரண்டாவது புகைப்படத்தில் உணவில் உள்ளே ஒரு இறந்த கரப்பான் பூச்சி இருப்பதை காணலாம்.


 






ட்வீட் செய்யப்பட்ட பத்து நிமிடங்களிலேயே, ஏர் விஸ்தாராவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக பதில் அளிக்கப்பட்டது. அதில், "வணக்கம் நிகுல், எங்களின் அனைத்து உணவுகளும் மிக உயர்ந்த தரத்தை மனதில் வைத்துத் தயாரிக்கப்படுகின்றன. தயவுசெய்து உங்கள் விமான விவரங்களை நேரடி மெசேஜ் மூலம் எங்களுக்கு அனுப்புங்கள். எனவே நாங்கள் விஷயத்தைப் பார்த்து விரைவில் அதைத் தீர்க்க முடியும். நன்றி" என குறிப்பிடப்பட்டிருந்தது.


முன்னதாக வியாழக்கிழமை, விஸ்தாரா மற்றும் ஏர் இந்தியாவை ஒருங்கிணைக்கும் சாத்தியமான ஒப்பந்தம் குறித்து இந்தியாவின் டாடா குழுமத்துடன் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் லிமிடெட் தெரிவித்திருந்தது.


முன்னதாக, ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட பீட்சாவில் கண்ணாடித் துண்டுகள் இருக்கும் அதிர்ச்சியூட்டும் படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ட்விட்டர் பயனர் ஒருவரால் இந்த புகைப்படம் பகிரப்பட்டு இருந்தது. பிரபல பீட்சா நிறுவனத்தில் இருந்து தான் பெற்றதாகக் கூறிய உணவின் படங்களை வெளியிட்ட அருண் கொல்லூரி என்பவர், தனது பீட்சாவில் கண்ணாடித் துண்டுகள் இருப்பதாக புகார் கூறியிருந்தார்.


 






இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "பிரபல உணவு நிறுவனத்தில் ஆர்டர் செய்த பீட்சாவில் 2 முதல் 3 கண்ணாடித் துண்டுகள் இருப்பதை கண்டறிந்துள்ளேன். உலகளவில் புகழ்பெற்ற பிராண்ட் எந்த மாதிரியான உணவை வழங்குகிறது என்பதையே இது உணர்த்துகிறது. இனி, அங்கு ஆர்டர் செய்வேனா? என்பது தெரியவில்லை" என பதிவிட்டுள்ளார்.


இதையும் படிக்க: காரில் அனைத்து பயணிகளுக்கும் சீட் பெல்ட் கட்டாயம்: நவ.1ல் மும்பையில் அமல்