நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் அடுத்த மாதம் 23-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் மசோதா தாக்கல் செய்யப்படும் என்று ஏற்கனவே மத்திய அரசு அறிவித்தது.
அவை தொடங்கிய சிறிது நேரத்திலேயே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வேளாண் சட்டம் , விவசாயிகள் மரணம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன் வைத்து கூச்சலிட்டனர். இதனால் அவையை நடத்த முடியாத சூழ்நிலை நிலவியது. எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக சபாநாயகர் ஓம் பிர்லா அவையை மதியம் 12 மணி வரை ஒத்திவைத்தார்.
இந்த நிலையில் கடந்த கூட்டத் தொடரின்போது அமளியில் ஈடுபட்டதாக,
1. ஸ்ரீ எளமரம் கரீம் (CPM),
4. ஸ்ரீ ரிபுன் போரா(INC),
5. ஸ்ரீ பினோய் விஸ்வம் (சிபிஐ),
6 .ஸ்ரீ ராஜாமணி படேல் (INC),
7. திருமதி. டோலா சென் (TMC),
8. ஸ்ரீமதி. சாந்தா சேத்ரி (TMC),
9. ஸ்ரீ சையத் நசீர் ஹுசைன் (INC),
10. ஸ்ரீமதி. பிரியங்கா சதுர்வேதி (சிவசேனா),
11. ஸ்ரீ அனில் தேசாய் (சிவசேனா),
12. ஸ்ரீ அகிலேஷ் பிரசாத் சிங் (INC)
ஆகிய 12 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
மத்திய அமைச்சரவை கூட்டம் மதியம் 1 மணிக்கு பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடைபெற இருக்கிறது. இந்தநிலையில், 12 எம்,பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக எதிர்க்கட்சி எம்,பிக்கள் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் அமளி தொடர்ந்து நீடித்ததால் மாநிலங்களவையை அடுத்து மக்களவையும் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை எம், பிக்கள் 12 பேரை சஸ்பெண்ட் செய்ததை வாபஸ் பெறாததற்கு எதிர்கட்சி எம், பிக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அவை ஒத்தி வைக்கப்பட்டது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்