தேர்தல் சீர்திருத்த மசோதாவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்பி வைக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தெரிவித்து வந்த நிலையில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 


இதையடுத்து எதிர்க்கட்சியிகளின் அமளியால் மக்களவை மதியம் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 


இந்தியாவில் வாக்காளர் அடையாள அட்டையிலும், தேர்தலிலும் சில முக்கியமான மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்தது வருகிறது. இதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையம் 4 வகையான தேர்தல் சீர்திருத்தங்களைக் கொண்டுவர உள்ளதாக கூறப்படுகிறது.


அதில், வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்க வகை செய்யும் தேர்தல் சீர்திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. இந்த சட்ட திருத்த மசோதா வாக்காளர்களை, வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணோடு இணைப்பதற்கு வழிவகை செய்கிறது.


மத்திய அமைச்சரவை ஒப்புதல் மூலம் ஒருவர் பல வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்துவதை தடுக்க முடியும் எனக் கூறப்படுகிறது. மேலும் பெண் ராணுவ அலுவலர் வெளியூர் சென்றால் அவருக்கு பதில் கணவர் வாக்களிக்கவும் இந்த மசோதா வழிவகுக்கிறது.






பிரதமர் மோடி தலைமையில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தேர்தல் ஆணையம் கோரிய சீர்திருத்தங்கள் ஏற்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டன. 



இதனிடையே நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தேர்தல் சீர்திருத்த மசோதா குறித்து அளித்த பேட்டியில், “இந்த மசோதவை தாக்கல் செய்வதை அறிமுக நிலையிலேயே தடுக்க வேண்டும். திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சியினருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விடுக்க கூடிய கோரிக்கை இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை விட வேண்டும். இது மிகவும் ஆபத்தானது, தேர்தல் நேரத்தில் அவர்களுக்கு வாக்களிக்க சிறுபான்மையினரை நீக்குவதற்கு இது ஏதுவாக அமைந்துவிடும். எனவே இது மிகவும் ஆபத்தான மசோதா, இதை அனைத்து கட்சிகளும் ஜனநாயக சக்திகளும் கடுமையாக எதிர்க்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிபில் வீடியோக்களை காண