பிரான்ஸ் தலைநகர் பாரிஸ்-க்கு செல்லவிருந்த விமானம் பயணத்தின் நடுவே தொழில்நுட்ப கோளாறு காரணமாக டெல்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 210 பயணிகளை ஏற்று கொண்டு சென்ற விமானம் பத்திரமாக விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது என விமான நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.


இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்த விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் மூத்த அதிகாரி, "டெல்லியில் இருந்து பாரிஸ் வரை இயக்கப்பட்ட AI143 என்ற எண் கொண்ட ஏர் இந்தியா B787-800 விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது" என்றார்.


இன்று மதியம் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் டெல்லியில் இருந்து பாரிஸ் வரை இயக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது குறித்து விசாரணை செய்ய விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டது. 


சமீப காலமாக, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவது வழக்கமாகிவிட்டது. சமீபத்தில், ஸ்பைஸ்ஜெட் (SpiceJet) விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென புகையால் சூழ்ந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். விமானம் அவரசரமாக தரையிறக்கப்பட்டது.


இதற்கு  ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் பதிலளிக்குமாறு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டது. கோவாவில் இருந்து ஹைதராபாத் சென்று கொண்டிருந்த ’SpiceJet Q400 - VT-SQB’ விமானத்தின் எஞ்ஜினில் திடீரென புகை கிளம்பியுள்ளது.


இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் விமான நிறுவன ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டன. அவரச நிலையை கருத்தில் கொண்டு விமான அருகில் உள்ள ரன்வேயில் தரையிறக்கப்பட்டது. இதனால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.


கடந்தாண்டு அக்டோபர் மாதம் இதேபோன்று ஒரு சம்பவம் நடைபெற்றது. ஏ.சி.யில் எண்ணெய் லீக்கேஜ் காரணமாக புகை கிளம்பியது. இதனால் அவரசரமாக ஹைதராபாத் விமான நிலையத்தில் அந்த விமான தரையிறக்கப்பட்டது. 


இம்முறையும் விமானத்தினுள் புகை எழுந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பயணிகள் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டனர். இருப்பினும், ஸ்பைஸ்ஜெட் நிறுவன விமானத்தில் அடிக்கடி விபத்து சம்பவங்கள் அதிகரித்திருப்பது பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


கடந்தாண்டு ஜூலை மாதமே இதுபோன்ற தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படாமல் இருப்பதை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் உறுதி செய்ய வேண்டும் என்று விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுருந்தது. ஆனால், ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் இது போன்ற கோளாறுகள் அதிகம் ஏற்படுவதாக புகார்கள் எழுகின்றன.  


இந்தாண்டில் மட்டும் ஸ்பைஸ் ஜெட் விமானங்களில்  8 முறை தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அந்நிறுவனத்திற்கு ஜூலை மாதம் நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது. இந்தமுறையாவது ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இதை கவனத்துடன் கையாளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.