Medicines Price: பாராசிட்டமல் மற்றும் அசித்ரோமசின் என விலையேற்றம் கண்ட, பல்வேறு மருந்துகளின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


மருந்துகளின் விலையேற்றம்:


தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை உயரும் என்று அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, குறிப்பிட்ட மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை 0.00551 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 12 சதவிகிதமும், அதற்கு முந்தைய ஆண்டு 10 சதவிகிதமும் மருந்துகளில் விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேநேரம்,  2017ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட விலை உயர்வை விட தற்போதைய விலையேற்றம்  குறைவாகும். இந்த விலையேற்றத்தின் தாக்கம் அத்தியாவசிய மருந்துகளில மட்டுமின்றி, வலிநிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் தொற்று எதிர்ப்பு மருந்துகளின் மீதும்  அடங்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


800 மருந்துகளின் விலையேற்றம்:


புதிய நடவடிக்கையால் 800 மருந்துகளின் விலை அதிகரிக்கும். அந்த பட்டியலில், பாராசிட்டமால், அசித்ரோமைசின், வைட்டமின்கள், தாதுக்கள், கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு சிகிச்சையளிக்க உதவும் சில மருந்துகள் மற்றும் ஸ்டீராய்டுகள் ஆகியவையும் அடங்கும். மேலும், அமோக்ஸிசிலின், ஆம்போடெரிசின் பி, பென்சாயில் பெராக்சைடு, செஃபாட்ராக்சில், செடிரிசின், டெக்ஸாமெதாசோன், ஃப்ளூகோனசோல், ஃபோலிக் அமிலம், ஹெப்பரின், இப்யூபுரூஃபன் போன்ற முக்கியமான மருந்துகளும் விலையேற்றம் கண்டுள்ளன. இந்த மருந்துகள் அனைத்தும் அத்தியாவசியமாக குறிப்பிடப்படுகின்றன. அரசு மருத்துவமனைகளிலும், சில்லறை விற்பனையிலும் முக்கியத்துவம் வகிக்கின்றன. 



  • வலி நிவாரணிகள்: டிக்லோஃபெனாக், இப்யூபுரூஃபன், மெஃபெனாமிக் அமிலம், பாராசெட்மால், மார்பின்

  • காசநோய் எதிர்ப்பு மருந்து: அமிகாசின், பெடாகுலின், கிளாரித்ரோமைசின்

  • வலிப்பு எதிர்ப்பு மருந்துகள்: க்ளோபாசம், டயஸெபம், லோராசெபம்

  • நச்சுக்கான மாற்று மருந்து: செயல்படுத்தப்பட்ட கரி, டி-பெனிசில்லாமைன், நலாக்சோன், பாம்பு விஷம் எதிர்ப்பு சீரம்

  • நுண்ணுயிர் எதிர்ப்பிகள்: அமோக்ஸிசிலின், ஆம்பிசிலின், பென்சில்பெனிசிலின், செஃபாட்ராக்சில், செஃபாசோலின், செஃப்ட்ரியாக்சோன்

  • கோவிட் மேலாண்மை மருந்துகள்

  • இரத்த சோகைக்கான மருந்துகள்: ஃபோலிக் அமிலம், இரும்பு சுக்ரோஸ், ஹைட்ராக்ஸோகோபாலமின் 

  • பார்கின்சன்ஸ் மற்றும் டிமென்ஷியா: ஃப்ளூனாரிசைன், ப்ராப்ரானோலோல், டோனெபெசில்

  • எச்.ஐ.வி மேலாண்மை மருந்துகள்: அபாகாவிர், லாமிவுடின், ஜிடோவுடின், எஃபாவிரென்ஸ், நெவிராபின், ரால்டெக்ராவிர், டோலுடெக்ராவிர், ரிடோனாவிர்

  • பூஞ்சை எதிர்ப்பு: க்ளோட்ரிமாசோல், ஃப்ளூகோனசோல், முபிரோசின், நிஸ்டாடின், டெர்பினாஃபைன் 

  • கார்டியோவாஸ்குலர் மருந்துகள்: டிலிடாசெம், மெட்டோப்ரோலால், டிகோக்சின், வெராப்ராமில், அம்லோடிபைன், ராமிபிரில், டெல்மிசார்டன்

  • தோல் மருத்துவ மருந்துகள்

  • பிளாஸ்மா மற்றும் பிளாஸ்மா மாற்றுகள்

  • வைரஸ் எதிர்ப்பு மருந்துகள்: அசைக்ளோவிர், வால்கன்சிக்ளோவிர் 
    மலேரியா மருந்துகள்: ஆர்ட்சுனேட், ஆர்டெமீதர், குளோரோகுயின், கிளிண்டமைசின், குயினைன், ப்ரிமாகுயின்

  • புற்றுநோய் சிகிச்சை மருந்துகள்: 5-ஃப்ளூரோராசில், ஆக்டினோமைசின் டி, ஆல்-டிரான்ஸ் ரெட்டினோயிக் அமிலம், ஆர்சனிக் ட்ரை ஆக்சைடு, கால்சியம் ஃபோலினேட்

  • கிருமி நாசினிகள் மற்றும் கிருமிநாசினிகள்: குளோரோஹெக்சிடின், எத்தில் ஆல்கஹால், ஹைட்ரஜன் பெராக்சைடு, போவிடின் அயோடின், பொட்டாசியம் பெர்மாங்கனேட் 

  • ஹாலோத்தேன், ஐசோஃப்ளூரேன், கெட்டமைன், நைட்ரஸ் ஆக்சைடு போன்ற பொது மயக்க மருந்துகள் மற்றும் ஆக்ஸிஜன் மருந்துகள்


பட்டியலிடப்பட்ட மருந்துகள்:


இந்திய சந்தையில் சுமார் 6,000 மருந்து வகைகள் கிடைக்கும் நிலையில், அவற்றில் சுமார் 18 சதவிகிதம் பட்டியலிடப்பட்ட மருந்துகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றின் விலையானது தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்டு, விலை கட்டுப்பாட்டிற்குள் இருப்பது உறுதி செய்யப்படுகிறது.