தமிழ்நாடு:



  • தேர்தல் நெருங்க நெருங்க, தோல்வி பயத்தில் செய்யக்கூடாததை எல்லாம் மோடி செய்கிறார் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  • வெளிநாடுகளுக்கு போதை பொருட்கள் கடத்திய விவகாரம்; தமிழ் திரைப்பட இயக்குநர் அமீர் உள்பட 3 பேர் நாளை நேரில் ஆஜராக தேசிய போதை தடுப்பு பிரிவு சம்மன்

  • புதுச்சேரியில் கால்வாயில் தூர்வாரும்போது சுவர் இடிந்து விழுந்து விபத்து - 5 பேர் உயிரிழப்பு, 3 பேருக்கு தீவிர சிகிச்சை

  • ஒரு ட்ரியல்லியன் டாலர் பொருளாதரத்தை எட்டுவதே தமிழ்நாட்டின் இலக்கு என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

  • புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் இராமாயணத்தை இழிவுபடுத்தும் வகையில் நாடகம் இயற்றியதாக கூறி ஏ.பி.வி.பி. மாணவ அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

  • தமிழ் மொழியின் பெருமையை உலகம் முழுமையாக உணர வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

  • மீண்டும் மோடி ஆட்சி வந்த பிறகு அரியலூர் - நாமக்கல் ரயில் போக்குவரத்து சேவை நிச்சயமாக தொடங்கப்படும் என அண்ணாமலை உறுதியளித்துள்ளார்.

  • இரட்டை இலைக்கு வாக்களிப்பது மோடிக்கு வாக்களிப்பதற்கு சமம் என்று சேலம் தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி பரப்புரையில் பேசினார்.

  • தேர்தலுக்கு பிறகு பாஜகவின் அடையாளமே இருக்காது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.


இந்தியா: 



  • நிலத்தகராறில் சமரசம் செய்ய வந்த காவல்துறையினரை துரத்தியடித்த பழங்குடியின மக்கள் - தெலங்கானாவில் பரபரப்பு

  • வணிக சிலிண்டர் விலை ரூ. 30 குறைந்து ரூ. 1930க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

  • தமிழ்நாடு முழுவதும் 29 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை இன்று முதல் அமல் படுத்தியது மத்திய அரசு

  • நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டிற்கு 6வது முறையாக பிரதமர் மோடி 9ம் தேதி வருகிறார் - சென்னையில் ரோடு ஷோவில் பங்கேற்கிறார். 

  • இரு மாநில முதலமைச்சர்களை சிறையில் தள்ளி பிரதமர் மோடி ‘மேட்ச் பிங்ஸிங்’; டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு

  • அருணாச்சலபிரதேச சட்டமன்ற தேர்தலில் 10 பாஜக எம்.எல்.ஏக்கள் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் எடுக்கப்பட்டுள்ள வருமானவரித்துறை நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர்.

  • கியூட் தேர்வுக்கான விண்ணப்பதிவை வருகிற 5-ந்தேதிவரை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.


உலகம்:



  • ஒரே நேரத்தில் 23 செயற்கைக்கோள்களை அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்.

  • அரசு நிகழ்ச்சிகளில் சிவப்பு கம்பளங்களை பயன்படுத்த தடை - பாகிஸ்தான் அதிரடி.

  • சிரியாவில் நோன்பு முடித்து ஹாப்பிங் செய்தபோது குண்டுவெடிப்பு - 7 பேர் உயிரிழப்பு, 30 பேர் காயம்.

  • அனைத்து பெண்களுக்கும் கருத்தடை மாத்திரைகள்/ உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

  • மெக்ஸிகோவில் அகதிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்து - 8 பேர் உயிரிழப்பு. 


விளையாட்டு: 



  • சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

  • ஐபிஎல் 2024: இன்று மும்பை அணியை எதிர்கொள்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி- முதல் வெற்றியை பெறுமா மும்பை இந்தியன்ஸ்

  • பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பாபர் அசாம் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

  • ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி