PAN 2.0: அப்டேட் செய்யப்பட்ட பான் கார்டை இ-மெயில் வாயிலாக பெறுவது எப்படி என்பது, ஒவ்வொரு படியாக கீழே விவரிக்கப்பட்டுள்ளது.


பான் 2.0 திட்டம்:


 மத்திய அரசாங்கத்தின் பான் 2.0 திட்டம் தொடர்பான அறிவிப்பிற்குப் பிறகு, புதிய கார்டை பெற என்ன செய்ய வேண்டும் என்று பெரும்பாலான மக்கள் மனதில் ஒரே கேள்வி உள்ளது? பான் எண்ணில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டும் என்றால், அது எப்படி செய்யப்படும்? அனைத்து அப்டேட்கள் அல்லது திருத்தங்கள் அல்லது பான் கார்டைப் பெறுவது இலவசம் என்று உங்களுக்குச் சொல்கிறோம். PAN 2.0 இன் e-PAN உங்கள் மின்னஞ்சல் ஐடியில் கிடைக்கும். இருப்பினும், QR உடன் அச்சடிக்கப்பட்ட பான் கார்டை பெற 50 ரூபாய் செலுத்த வேண்டும். மேலும், தபால் கட்டணத்துடன் பான் எண்ணை வெளிநாடுகளுக்கு டெலிவரி செய்ய ரூ.15 செலுத்த வேண்டும்.



மின்னஞ்சலில் PAN 2.0 ஐப் பெற என்ன செய்ய வேண்டும்?


PAN 2.0 திட்டம் இன்னும் தொடங்கப்படவில்லை. ஆனால் வரி செலுத்துவோர் தங்கள் மின்னஞ்சல் ஐடியில் PAN ஐப் பெறலாம். உங்கள் மின்னஞ்சல் ஆனது  ஐடி வருமான வரி தரவுத்தளத்தில் பதிவு செய்யப்படவில்லை என்றால், அதை இலவசமாகவும் புதுப்பிக்கலாம்.


இ-பான்-ஐ பதிவிறக்கம் செய்வது எப்படி?



  • NSDL இணைப்பிற்குச் செல்லவும்

  • பான், ஆதார் எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடவும்

  • தேவையான தகவலை பூர்த்தி செய்த பிறகு, தேர்வுப்பெட்டியில் டிக் செய்து, சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்

  • உங்கள் தகவலை சரிபார்க்க பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP வரும். OTP 10 நிமிடங்களுக்கு செல்லுபடியாகும்

  • கட்டண விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, 'செலுத்துவதற்குச் செல்லவும்' என்பதைக் கிளிக் செய்யவும்.

  • பணம் செலுத்திய பிறகு, உங்கள் மின்னஞ்சல் ஐடிக்கு e-PAN அனுப்பப்படும்.



e-PAN ஐப் பெற 30 நிமிடங்கள் வரை ஆகலாம். நீங்கள் இ-பான் பெறவில்லை என்றால், tininfo@proteantech.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் அல்லது 020-27218080/81 என்ற ஹெல்ப்லைன் எண்ணைத் தொடர்புகொள்ளலாம். டிஜிட்டல் பான் எண்ணைப் பெற இந்த செயல்முறை எளிதாக்கப்பட்டுள்ளது.


மத்திய அரசின் பான் 2.0 திட்டம்:


டிஜிட்டல் இந்தியா பிரச்சாரத்தை வலுப்படுத்தும் வகையில், பான் கார்டை புதுப்பிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் கீழ், PAN 2.0 திட்டம் தொடங்கப்பட்டுள்ளது, இதில் QR குறியீடு போன்ற புதிய தொழில்நுட்ப சேவைகள் சேர்க்கப்படும். வரி செலுத்துவோரின் பதிவு சேவையை டிஜிட்டல் மற்றும் அப்டேட்டடாக மாற்றுவதற்கு வருமான வரித்துறையின் இந்த திட்டம் ஒரு முக்கியமான படியாகும்.


PAN 2.0 திட்டம் என்றால் என்ன?


PAN 2.0 என்பது தற்போதுள்ள PAN / TAN 1.0 அமைப்பின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பாகும். இதன் கீழ், PAN மற்றும் TAN சேவைகள் ஒருங்கிணைக்கப்பட்டு டிஜிட்டல் முறையில் இயக்கப்படும். வரி செலுத்துவோருக்கு எளிதான மற்றும் விரைவான சேவையை வழங்குவதே இதன் நோக்கம்.


தற்போதுள்ள பான் கார்டுக்கு என்ன ஆகும்?


தற்போதுள்ள பான் எண்ணில் மாற்றம் இருக்காது என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். வரி செலுத்துவோர் புதிய பான் எண்ணைப் பெறத் தேவையில்லை.


அனைவருக்கும் புதிய பான் கார்டு கிடைக்குமா?


தற்போதுள்ள அனைத்து பான் கார்டுதாரர்களும் க்யூஆர் குறியீடு மற்றும் புதிய தொழில்நுட்ப அம்சங்களுடன் கூடிய புதிய பான் கார்டைப் பெறுவார்கள். புதிய பான் கார்டுக்கு வரி செலுத்துவோர் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.