பக்ரீத் பெருநாள் இன்று உலகமெங்கும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அண்டை நாடுகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் இனிப்புகளைப் பரிமாறிக் கொண்டது. இந்திய பாகிஸ்தான் ராணுவத்தினர் ஜம்மு மற்றும் காஷ்மீரை ஒட்டியுள்ள எல்லைப் பகுதிகளான உரி மாவட்டத்தின் கமன் அமன் சேது, தங்தாரின் தித்வால் பகுதி, குப்வாரா, பூஞ்ச், ராவல்கோட், மெந்தார் என பல பகுதிகளில் சந்தித்து இனிப்புகளைப் பரிமாறிக் கொண்டனர். 






முன்னதாக, உலகளவில் இஸ்லாமிய மக்களால் முக்கிய பண்டிகையான பக்ரீத் இன்று கொண்டாடப்படுகிறது. நபிகளாரின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக இந்தப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஹஜ் பெருநாள் என்றும் இது அழைக்கப்படுகிறது. பிறை தெரிய தமிழகத்தில் இன்று பக்ரீத் கொண்டாடப்படுகிறது.  இன்றைய தினத்தை இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு புத்தாடை அணிந்து கொண்டாடுகின்றனர். பக்ரீத் பண்டிகைக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைத்துறையினர், விளையாட்டு வீரர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகள் தெரிவித்திருந்தனர்