இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், ஜம்முவை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. ஆனால், வானில் பறந்து வந்த ட்ரோன்களை இந்திய ஏவுகணைகள் தாக்கி அழித்துள்ளது. இந்த பரபரப்பு காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஜம்முவை குறிவைத்து தாக்குதல்:

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய பாதுகாப்பு படை நேற்று தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 இடங்களில் தீவிரவாத நிலைகள் மீது இந்திய நடத்திய தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து, எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. 

இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் உச்சத்தை தொட்டுள்ள நிலையில், ஜம்முவை குறிவைத்து மீண்டும் தாக்க தொடங்கியுள்ளது பாகிஸ்தான். ஆனால், வானில் பறந்து வந்த ட்ரோன்களை இந்திய ஏவுகணைகள் தாக்கி அழித்துள்ளது.

 

ஜம்முவில் அக்னூர், சாம்பா பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஜம்மு மட்டும் இன்றி பஞ்சாப் பதான்கோடிலும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.