ஒரு காலத்தில் அதிரடி பேட்டிங்கிற்கு பெயர் பெற்ற பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி, சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய அரசு மற்றும் இந்திய ராணுவத்தின் மீது பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாஹித் அஃப்ரிடி கடுமையாக விமர்சித்துள்ளார். காஷ்மீர் பள்ளத்தாக்கின் பிரபலமான இடமான பைசரன் புல்வெளியில் கடந்த செவ்வாய்கிழமை(22.04.25) பயங்கரவாதிகளால் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்
அப்ரிடி குற்றச்சாட்டு:
"பஹல்காமில் பயங்கரவாதிகள் ஒரு மணி நேரம் மக்களைக் கொன்றனர், 8 லட்சம் பேரில் ஒரு இந்திய வீரர் கூட வரவில்லை. ஆனால் அவர்கள் வந்தபோது, அவர்கள் பாகிஸ்தானைக் குற்றம் சாட்டினர்," என்று அஃப்ரிடி பாகிஸ்தானில் உள்ள உள்ளூர் ஊடக செய்தியாளர்களிடம் கூறினார்.இந்தியாவே பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது. தனது சொந்த மக்களைக் கொன்றுவிட்டு, பின்னர் பாகிஸ்தானைக் குறை கூறுகிறது. எந்த நாடும் அல்லது மதமும் பயங்கரவாதத்தை ஆதரிக்காது. நாங்கள் எப்போதும் அமைதியை ஆதரிக்கிறோம். இஸ்லாம் நமக்கு அமைதியைக் கற்பிக்கிறது, பாகிஸ்தான் அத்தகைய செயல்களை ஒருபோதும் ஆதரிக்கவில்லை. இந்தியாவுடனான எங்கள் உறவை மேம்படுத்த நாங்கள் எப்போதும் முயற்சித்துள்ளோம்."
நாங்கள் அமைதியை பேசுகிறோம்:
'பாகிஸ்தான் எங்கள் மதம், இஸ்லாம் அமைதியைப் பற்றி பேசுகிறது. நாங்கள் இந்தியாவுடன் நல்லுறவை உருவாக்க முயற்சித்து வருகிறோம். அங்கிருந்து எங்களுக்கு எப்போதும் அச்சுறுத்தல்கள் வந்தன. நாங்கள் அங்கு விளையாடச் செல்வோமா இல்லையா என்பது கூட எங்களுக்குத் தெரியாது. 2016 உலகக் கோப்பையில் நான் கேப்டனாக இருந்தேன். நாங்கள் லாகூரில் இருந்தோம், இந்தியாவுக்கு விமானத்தில் செல்ல முடியுமா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. அதனால்தான் விளையாட்டு சிறந்தது என்று நான் சொல்கிறேன். உங்கள் கபடி அணி வருகிறது, ஆனால் கிரிக்கெட் அணி வராது. நீங்கள் அதைச் செய்ய விரும்பினால், அதை முற்றிலுமாக நிறுத்துங்கள், இல்லையெனில் அதைச் செய்யாதீர்கள்.'
அப்ரிடியின் இந்த கருத்துக்கு இந்தியர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.