பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா நடத்திய தாக்குதலுக்கு எதிராக, பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

Continues below advertisement


பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் 


பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய பாதுகாப்பு படை நேற்று தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 இடங்களில் தீவிரவாத நிலைகள் மீது இந்திய நடத்திய தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 


இதையடுத்து, எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் உச்சத்தை தொட்டுள்ள நிலையில், ஜம்முவை குறிவைத்து மீண்டும் தாக்க தொடங்கியுள்ளது பாகிஸ்தான். ஆனால், வானில் பறந்து வந்த ட்ரோன்களை இந்திய ஏவுகணைகள் தாக்கி அழித்துள்ளது.


அராஜகத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் 


இந்தியா மீது குறி வைத்து தாக்குதல் நடத்த பாகிஸ்தானின் ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்களை பாகிஸ்தான் அனுப்பிய நிலையில், அனைத்து ட்ரோன்களும் தாக்கி அழிக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து பொதுமக்கள் அதிகமாக இருக்கும் இடங்களை குறிவைத்து, பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயற்சி செய்தபோதும் அவற்றை இந்திய பாதுகாப்பு அம்சங்கள் தகர்த்து எறிந்து வருகின்றன. இதனால் பாகிஸ்தான் இருக்கும் அனைத்து முயற்சிகளும் வீணாகி வருகின்றன. 


பாகிஸ்தான் விமானத்தை வீழ்த்தியது இந்தியா 


இந்நிலையில், இந்தியாவை நோக்கி தாங்கள் அனுப்பிய ஏவுகணைகளையும் இந்திய ராணுவம் தடுத்த நிலையில், தங்களது இரண்டு போர் விமானங்களை ஆயுதங்களுடன் இந்தியாவின் ராணுவ படைதளம் நோக்கி அனுப்பியது பாகிஸ்தான். 


ஆனால், பாகிஸ்தானின் JF-17 என்ற இரண்டு போர் விமானங்களையும் இந்திய விமானப்படையும், ராணுவமும் இடைமறித்து சுட்டு வீழ்த்தியுள்ளது. இதனை பாகிஸ்தானின் ராணுவ படை தளபதிகளில் ஒருவரான அகமது ஷரிப் சவுத்திரி உறுதிப்படுத்தியிருக்கிறார். தங்களது இரண்டு போர் விமானங்களும் பணிகளுக்கு இடையே இழந்துவிட்டோம் என்று அவர் கூறியிருக்கிறார்.


பிடிபட்ட பாகிஸ்தான் விமான படைவீரர்


பாகிஸ்தான் இந்தியா மீது நடத்தும் அனைத்து தாக்குதலையும், இந்தியா வெற்றிகரமாக தடுத்து வருகிறது. அந்த வகையில் பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த விமானி ஒருவரை இந்திய ராணுவம் கையும் களவுமாக பிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில் வெளியேறிய விமானி பிடிபட்டார்.


ராஜஸ்தான் ஜெய்சால்மர் எல்லை அருகே பாகிஸ்தான் விமானி உயிருடன் பிடிபட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை இந்திய ராணுவம் இரண்டு விமானங்களை, சுட்டு வீழ்த்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதேபோன்று ஏராளமான ட்ரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.