கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த கனமழையின் காரணமாக பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தால் 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஜூன் மாதத்திலிருந்து பெய்து வரும் மழையால் 10 பில்லியன் டாலர்கள் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.


 






தெற்காசியாவில் பதிவான அதிகபட்ச வெப்ப நிலையை தொடர்ந்து தீவிர வானிலை நிகழ்வுகள் பதிவாகின. இது ஒரு காலநிலை பேரழிவு என பாகிஸ்தான் காலநிலை மாற்றத்திற்கான மத்திய அமைச்சர் ஷெர்ரி ரெஹ்மான் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து மேலும் விவரித்த அவர், "பல மாவட்டங்கள் கடலின் ஒரு பகுதியாகவே தோன்றத் தொடங்கியுள்ளன. ரேஷன்களை கொடுக்க சென்ற எங்கள் ஹெலிகாப்டர்களால் கூட வறண்ட நிலத்தைக் கண்டுபிடிக்கவில்லை. உலகின் ஐந்தாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடான பாகிஸ்தான் முழுவதும் 30 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடற்படை முதல் முறையாக நிறுத்தப்பட்டுள்ளது" என்றார்.


இதை தொடர்ந்து பேசிய நிதித்துறை அமைச்சர் மிஃப்தா இஸ்மாயில், "பொருளாதாரத்தின் பல்வேறு துறைகள் எவ்வளவு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன என்பது பற்றிய உடனடி மதிப்பீடு எதுவும் இல்லை. மேலும் சேத மதிப்பு 10 பில்லியன் டாலர்களை தாண்டும்.


இதையும் படிக்க: Breaking LIVE: மணீஷ் சிசோடியா வங்கி லாக்கரில்  சிபிஐ சோதணை 


என்னிடம் பணம் இல்லை. ஆனால் ஏதாவது வழி கிடைக்கும் என்று நம்புகிறேன். பாகிஸ்தான் மூழ்கிக் கொண்டிருக்கிறது. எல்லா இடங்களிலும் சேதம் ஏற்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக உள்நாட்டு சந்தையில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த, இந்தியாவுடன் தற்காலிக தரைவழிப் பாதையைத் திறப்பதற்கு பாகிஸ்தான் வரியின்றி காய்கறிகளை இறக்குமதி செய்ய அனுமதிக்க உள்ளது" என்றார்.


கடந்த காலத்தில், இம்மாதிரியான சூழல்களின்போது, தற்காலிக வர்த்தகத்திற்கு பாகிஸ்தான் அனுமதி வழங்கி உள்ளது. 


ஆசியாவில் இதுவரை நடைபெற்றிராத வேகமான பணவீக்க விகிதங்களில் ஒன்றை பாகிஸ்தான் அரசு எதிர்கொண்டு டாலர் பற்றாக்குறையை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் இறங்கிய நிலையில், இயற்கை பேரழிவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச நிதியம் திங்களன்று கூடுகிறது. 6 பில்லியன் டாலர் கடன் திட்டத்தை மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதையும் படிக்க: Factcheck : ஒவ்வொரு ஆதார் அட்டைக்கும் இத்தனை லட்சம் கடனா? மத்திய அரசு தெரிவித்தது என்ன?


நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு புதிய தேர்தலை நடத்துமாறு பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பின் அரசாங்கத்திற்கு முன்னாள் பிரதமர் இம்ரான் கான்  அழுத்தம் கொடுத்து வருகிறார். திங்கட்கிழமை மாலை, வெளிநாடு வாழ் பாகிஸ்தானியர், தனது ஆதரவாளர்கள் ஆகியோரிடையே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிதி திரட்ட டெலிதொன் ஒன்றை நடத்த உள்ளார்.