பாகிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ X முகவரியான @GovtofPakistan இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. 

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 2025 ஏப்ரல் 22 செவ்வாய்க்கிழமை நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்த பதட்டங்களுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் நடத்தியதாகக் கூறப்படும் இந்தத் தாக்குதலில் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர்.

எக்ஸ் தளம் முடக்கம்:

இந்தியாவில் உள்ள ட்விட்டர் பயனர்கள் பாகிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ கணக்கை பார்வையிட முடியவில்லை "சட்டப்பூர்வ கோரிக்கையின் பேரில் இந்தியாவில் @GovtofPakistan கணக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது" பாகிஸ்தானின் ட்விட்டர் இந்தியாவில் தடை செய்யப்படுவது இது முதல் முறையல்ல. முன்னதாக 2023 ஆம் ஆண்டும், ஜூலை மற்றும் அக்டோபர் 2022 ஆம் ஆண்டும் இது தடை செய்யப்பட்டது.

தூதரக பாதுக்காப்பு ரத்து:

பஹல்காம் பிறகு பயங்கரவாத தாக்குதலுக்குப் பாகிஸ்தான் தூதரகத்திற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை இந்தியா திரும்பப் பெற்றுள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்டுள்ளது மற்றும் சார்க் விசா விலக்கு திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள இராணுவ வெளியேற்றப்படுவார்கள். தாக்குதலுக்கு பதிலளிக்கும் ஆலோசகர்கள் பஹல்காம் விதமாக டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை இந்தியா திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.இது தொடர்பாக பாகிஸ்தான் தூதரை அழைத்து அறிக்கை அளித்த வெளியுறவு அமைச்சகம் அறிக்கையை அளித்துள்ளது. இதற்கிடையில் இந்தியாவில் பாக் தூதரகத்தில் கேக் கொண்டாடப்பட்டதாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாகிஸ்தானியர்கள் வெளியேற வேண்டும்: 

இந்த கொடூரமான தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, இந்திய அரசாங்கம் புதன்கிழமை சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்ததுடன், இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் உயர் தூதரக அதிகாரியையும் வரவழைத்தது. சார்க் விசா விலக்கு திட்டத்தின் (SVES) கீழ் பாகிஸ்தான் குடிமக்கள் இனி இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. பாகிஸ்தானியர்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட அனைத்து SVES விசாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன, மேலும் இந்தத் திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ளவர்கள் வெளியேற 48 மணிநேரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.