நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையன் இருவரும் பத்மஸ்ரீ விருது வென்று அசத்தியுள்ளனர்.
3 இரட்டையர்கள் உட்பட 106 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 6 பேருக்கு பத்ம விபூஷன் விருதும், 9 பேருக்கு பத்ம பூஷன் விருதும், 91 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன. 19 பெண்கள், 7 பேர் காலமானவர்கள், வெளிநாட்டவர் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர் பிரிவில் 2 பேர் என அறிவிக்கப்பட்டுள்ளன.
பத்ம விபூஷன்:
நாட்டின் மிகப்பெரிய விருதான பத்ம விபூஷண் விருது மருத்துவ துறையில் சிறந்து விளங்கிய மறைந்த மருத்துவர் திலீப் மகலனாபிசுக்கு வழங்கப்பட்டுள்ளது. குழந்தை நல மருத்துவத்தில் இவர் ஆற்றிய அளப்பரிய பங்கிற்காக இந்த விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஜாகீர் உசேன், எஸ்.எம்.கிருஷ்ணா, முலாயம் சிங் உள்ளிட்டோருக்கும் பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்ம பூஷன் விருதுகள்:
சுதா மூர்த்தி, குமார் மங்கலம் பிர்லா உள்ளிட்ட 9 பேருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்மஸ்ரீ விருதுகள்:
பத்ம விருதுகளில் மற்றொரு உயர்ந்த விருதுகளான பத்மஸ்ரீ விருதுகள் பெற்ற பெயர்கள் சில...
- ராம்சந்த்ரா கர் – அந்தோமாண் நிகோபர் தீவில் ஜராவா பழங்குடியினருக்கு ஆற்றிய மருத்துவ சேவைக்காக
- ஹீராபாய் லோபி – பழங்குடியின மககளின் உரிமைகளுக்காக போராடியதற்காக
- முனீஸ்வர் சந்தர் தவார் – 1971ம் ஆண்டில் போரில் மருத்துவராக பணியாற்றியதுடன் 20 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்தவர்
- ராம்குவாங்பே நியூமே – ஹெரேகா சமூக மக்களின் நலனுக்காக போராடிய சமூக ஆர்வலர்
- அப்புகுட்டன் பொதுவால் – சுதந்திர போராட்ட வீரர் மற்றும் காந்தியவாதி (1942ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் போராடியதற்கா)
- சங்குரத்ரி சந்திரா சேகர் – காகிநாடாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர்
- வடிவேல் கோபால் – மாசி சடையன் – தமிழ்நாட்டைச் சேர்ந்த பாம்புபிடி வீரர்கள் ( உலகம் முழுவதும் பல இடங்களில் ஆபத்தான பாம்புகளை பிடித்துள்ளனர்)
- துலாராம் உப்ரெதி – 98 வயதிலும் இயற்கை விவசாயத்தை பாரம்பரிய முறைப்படி செய்து வருவதற்காக
- நெக்ராம் ஷர்மா – மாண்டியில் பாரம்பரிய முறைப்படி விவசாயம் செய்து வருகிறார். இயற்கை விவசாயத்தில் சாதித்தற்காக
- ஜனும்சிங் சோய் – ஜார்க்கண்டைச் சேர்ந்த பழங்குடியின மேதை
- தனிராம் டோட்டோ – மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த டோட்டோ மொழி ஆய்வாளர்
- ராமகிருஷ்ணா ரெட்டி – தெலங்கானாவைச் சேர்ந்த 80 வயது மொழி ஆராய்ச்சியாளர்
- அஜய்குமார் மாண்டவி – கோண்ட் பழங்குடியின மரச்சிற்ப கலைஞர்
- ராணி மாச்செய்யா – கர்நாடகாவைச் சேர்ந்த 79 வயதான நாட்டுப்புற நடனக்கலைஞர்
- கே.சி. ரன்ரெம்சங்கி – மிசோரத்தைச் சேர்ந்த 59 வயதான நாட்டுப்புற கலைஞர்
- ரைசிங்போர் குர்கலாங் – மேகலாயாவைச் சேர்ந்த 60 வயதான இசைக்கலைஞர்
- மங்கல காந்தி ராய் – மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 102 வயதான இசைக்கலைஞர்
- மோவ் சுபோங் – நாகலாந்தைச் சேர்ந்த 61 வயதான நாகா இசைக்கலஞர்
- முனிவெங்கடப்பா – கர்நாடகாவைச் சேர்ந்த நாட்டுப்புற கலைஞரான 72 வயதான இசைக்கலைஞர்
- டோமர்சிங் கன்வர் – சத்தீஸ்கரில் 75 வயதான கலைஞர்
- பர்சுராம் கோமாஜி குனே – மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த நாடக கலைஞர்
- குலாம் முகமது ஜாஸ் – ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 81 வயதான கைத்தறி கலைஞர்
- பானுபாய் சித்தாரா – குஜராத்தைச் சேர்ந்த 66 வயதான ஓவியர்
- பரேஷ் ராத்வா – குஜராத்தைச் சேர்ந்த ஓவியர்
- கபில்தேவ் பிரசாத் – பீகாரைச் சேர்ந்த 68 வயதான டெக்ஸ்டைல் கலைஞர்
மேற்கண்டவர்களுக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட உள்ளது.