பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 


இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியைக் குறைப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று இரவு அறிவித்தார். அதில், பெட்ரோல் விலை ரூபாய்க்கும் 8-ம், டீசல் விலை ரூபாய்க்கும் 6-ம் கலால் வரியை குறைத்துள்ளதாக குறிப்பிட்டார். 






இந்தநிலையில், பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியை குறைப்பது மத்திய அரசுக்கு மட்டுமே வருவாய் இழப்பு ஏற்படும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி குறைப்பு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. மத்திய நிதியமைச்சர் 'எக்சைஸ் டூட்டி' என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார். ஆனால் மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படாமல் கூடுதல் கலால் வரியில் குறைப்பு உள்ளது.






எனவே, நேற்று நான் கூறியதற்கு மாறாக, குறைப்பின் முழுச் சுமையும் மத்திய அரசு மீதுதான் விழுகிறது. அந்த அளவுக்கு, நான் திருத்தமாக நிற்கிறேன் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளின் மூலம் மாநிலங்கள் மிகவும் குறைவாகவே பெறுகின்றன. அவர்களின் வருமானம் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை VAT மூலமே கிடைக்கிறது. 


மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கினாலோ அல்லது அதிக மானியம் கொடுத்தாலோ அவர்களால் அந்த வருவாயை விட்டுக்கொடுக்க முடியுமா என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. "பிசாசுக்கும் ஆழ்கடலுக்கும்" இடையே இருப்பது போல் நிலைமை உள்ளது என்று தெரிவித்துள்ளார். 


முன்னதாக, கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல், டீசல் விலை கடுமையாக ஏறி வந்தது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அவதியை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு பெட்ரோல் மீதான வரியை ரூபாய் 3 குறைத்து பெட்ரோல் விலையை ரூபாய் 100க்கு கீழ் கொண்டு வந்தது. ஆனாலும், மீண்டும் விலை ஏறியதன் விளைவாக சென்னையில் கடந்த 40 நாட்களாக பெட்ரோல் விலை ரூபாய் 110க்கு விற்பனையாகி வந்தது.


இந்த சூழலில், பெட்ரோல், டீசல் மீதான சுங்கவரியை குறைத்து பெட்ரோல், டீசல் விலையை அதிரடியாக குறைத்ததால் வாகன ஓட்டிகள் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர். இந்த விலை குறைப்பு மக்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண