P.Chidambaram: குஐராத் மாநிலம் மோர்பி தொங்கும் பாலம் விபத்துக்கு இதுவரை யாரும் மன்னிப்பு கேட்காதது அதிர்ச்சி அளிக்கிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மோர்பி பாலம் விபத்து
கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி மாலை 6.42 மணிக்கு குஜராத் மாநிலத்தில் உள்ள மோர்பி தொங்கு பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 135 பேர் உயிரிழந்தனர். 100 பேர் காயமடைந்துள்ளனர். சத் பூஜைக்காக மக்கள் கூட்டம் பாலத்தில் குவிந்திருந்த போது எதிர்பாராமல் பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான இந்தச் சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்தப் பால விபத்து தொடர்பாக மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து அகமதாபாத்தில் பேசியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியதாவது, ” இந்த சம்பவம் குஜராத் மாநிலத்தின் பெயருக்கு அவமானப்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவத்திற்கு அரசு சார்பில் யாரும் பொறுப்பேற்று ராஜினாமா செய்யவில்லை. அரசியல் தலைவர்கள் யாரும் இதற்கு மன்னிப்பு கேட்காதது அதிர்ச்சியாக உள்ளது என தெரிவித்தார். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் வேறு நாட்டில் நிகழ்ந்திருந்தால், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் சம்பந்தப்பட்டவர்கள் ராஜினாமா செய்திருப்பார்கள் என தெரிவித்தார்.
பின்பு, குஜராத் தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிடுவது குறித்து பேசிய அவர், தங்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என குஐராத் மக்களுக்கு தனது வேண்டுகோளாக விடுக்கிறேன் என தெரிவித்தார். மேலும் அமலாகத்துறை மற்றும் சிபிஐ, பாஜாகவின் கைப்பாவையாக உள்ளது. அவர்கள், 95 சதவீதம் எதிர்க்கட்சி நிர்வாகிகளை குறிவைத்து கைது செய்கிறார்கள் என ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
குஜராத் சட்டப்பேரவை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. 89 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக டிசம்பர் 1-ஆம் தேதியும், 93 தொகுதிகளுக்கு இரண்டாவது கட்டமாக டிசம்பர் 5- ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 8- ஆம் தேதி எண்ணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது