தன்னுடைய திறன் மற்றும் பொருளாதார ஆலோசகர்களின் திறனில் நம்பிக்கையை இழந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதாரத்தை மீட்டெடுக்க கிரகங்களின் உதவியை நாடி உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் விமர்சித்து உள்ளார்.






உலகின் சக்தி வாய்ந்த தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட புகைபடங்களை நாசா வெளியிட்ட நிலையில், அதை  ரீட்வீட் செய்த நிர்மலா சீதாராமனை சிதம்பரம் விமரிசித்துள்ளார். இதுகுறித்து சிதம்பரம் ட்விட்டர் பக்கத்தில், "பணவீக்கம் 7.01% ஆகவும் வேலையின்மை 7.8% ஆகவும் உயர்ந்த நாளில் வியாழன், புளூட்டோ மற்றும் யுரேனஸின் படங்களை நிதி அமைச்சர் ட்வீட் செய்ததில் எங்களுக்கு ஆச்சரியமில்லை.






தனது சொந்த திறன் மற்றும் தனது பொருளாதார ஆலோசகர்களின் திறன்கள் மீதான நம்பிக்கையை விட்டுவிட்டு, பொருளாதாரத்தை மீட்டெடுக்க கிரகங்களை அழைக்கிறார். முதலில் அவர், தலைமை பொருளாதார ஜோதிடரை நியமிக்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.


முன்னதாக, நிர்மலா சீதாராமனை சாடிய காங்கிரஸ், "நாட்டின் பொருளாதாரத்தை மீட்சி பாதையில் அழைத்து செல்வதை விட யுரேனஸ் மற்றும் புளூட்டோவில் அதிக ஆர்வம் காட்டுகிறார்" எனக் கூறியுள்ளது.


பொருளாதார கொள்கை, சீன விவகாரம் உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசை காங்கிரஸ் தொடர்ந்து விமர்சித்து வருகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண