டெல்லியில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் அருகே அமைந்துள்ள ரேஸ் கோர்ஸ் பள்ளிவாசலை காலி செய்யுமாறு மத்திய அரசின் நிலம் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் நோட்டீஸ் அனுப்பியுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் நூறாண்டுகளுக்கு மேல் பழமையான இந்த பள்ளிவாசல் அரசுக்குச் சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாக கூறி, அதனை காலி செய்யுமாறு கடந்த 19-ஆம் தேதியன்று 6 நாட்கள் கெடுவுடன் நோட்டீஸ் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.   

Continues below advertisement

 இஸ்லாமிய அமைப்புக்கள் கண்டனம்

 இந்நிலையில், பள்ளிவாசல் பாரம்பரியச் சொத்து என புதுடெல்லி மாநகராட்சி இணையதளத்தில் பட்டியலிடப்பட்டிருந்ததாகவும்,அது வஃக்ப் வாரிய சொத்து எனவும் பள்ளிவாசல் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிவாசலை காலி செய்ய வேண்டுமென்ற உத்தரவுக்கு இந்தியா முழுவதிலும் இருந்தும் இஸ்லாமிய அமைப்புக்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளன.

வேறு பகுதியில் குடியேற்ற உத்தரவு

இது மட்டுமின்றி டெல்லி உயர்நீதிமன்றம் அப்பகுதியில்  இருந்து குடிசைவாசிகளை அகற்ற உத்தரவிட்டுள்ளதாகவும், அவ்வாறு வெளியேற்றப்படும் மக்களை அடிப்படை வசதிகளுடன் சவ்தா கேவ்ரா பகுதியில் குடியமர்த்த மாநகராட்சிக்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Continues below advertisement