ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அமைதிக்கு பேர் போன டால் ஏரியில் திடீரென்று ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று மாலை பலத்த காற்று காரணமாக ஏரியில் பல சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது. இந்த சம்பவத்தின் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில், தண்ணீரில் மூழ்கும் சிலர் தங்களைக் காப்பாற்றுங்கள் என உதவி கோருவதை காணலாம்.

Continues below advertisement

டால் ஏரியில் பரபரப்பு:

சுற்றுலாப் பயணிகளுக்கு அமைதி தரும் இடமாகக் கருதப்படும் டால் ஏரி, இந்த விபத்தால் திகிலூட்டும் பகுதியாக மாறியது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, அப்பகுதியில் பெரும் பீதி ஏற்பட்டது. மக்களை காப்பாற்றும் நோக்கில் உள்ளூர் நிர்வாகம் உடனடியாக நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கியது.

ஸ்ரீநகரின் புகழ்பெற்ற தால் ஏரியில் இன்று மாலை ஒரு பெரிய விபத்து நிகழ்ந்தது. சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு திடீரென வீசிய பலத்த காற்றின் காரணமாக சமநிலையை இழந்து ஏரியில் கவிழ்ந்தது. அப்போது, படகில் அமர்ந்திருந்த சுற்றுலாப் பயணிகள் ஏரியில் விழுந்து, தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இங்கும் அங்கும் நீந்திச் சென்றுள்ளனர்.

Continues below advertisement

வைரலாகும் வீடியோ:

இந்த விபத்து தொடர்பான காணொளியும் வெளியாகியுள்ளது. அதில், தண்ணீரில் மூழ்கியபடி மக்கள் உதவி கேட்டு அலறுவதை தெளிவாகக் காணலாம். படகு கவிழ்ந்தவுடன், அங்கு குழப்பம் ஏற்பட்டது. அருகில் இருந்த மற்ற சுற்றுலா பயணிகள் உதவிக்கு ஓடி வந்தனர். இதுகுறித்து நேரில் கண்டவர்கள் கூறுகையில், "காற்று மிகவும் பலமாக இருந்ததால் படகினை ஓட்டுநரால் கட்டுப்படுத்த முடியவில்லை.

விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன், உள்ளூர் நிர்வாகம் உடனடியாக மீட்புப் பணியைத் தொடங்கியது. காவல்துறை, SDRF மற்றும் உள்ளூர் மக்களின் உதவியுடன், ஏரியில் விழுந்த சுற்றுலாப் பயணிகள் மீட்கப்பட்டனர். எத்தனை பேர் காயமடைந்தனர் அல்லது காணாமல் போனார்கள் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

 

டால் ஏரியில் நடந்த இந்த விபத்துக்குப் பிறகு, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. படகு ஓட்டுநர்களுக்கு வானிலை தகவல்கள் வழங்கப்படுகிறதா? சுற்றுலாப் பயணிகளுக்கு லைஃப் ஜாக்கெட்டுகள் போன்ற போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுகின்றனவா? இந்தக் கேள்விகளுக்கு நிர்வாகம் பதிலளிக்க வேண்டும் என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.