மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது, அடிப்படை காரணம் எதுவும் இல்லாத குற்றச்சாட்டுக்கு விளக்கம் கேட்டால் எதிர்க்கட்சியினர் விளக்கம் அளிப்பதில்லை. சாதிய ரீதியான பிரச்சினை தமிழ்நாட்டில் இன்றும் உள்ளது. மற்ற மாநிலங்களில் இல்லாத சாதி கொடுமை தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. 

விழிஞ்சம் துறைமுகத்திற்கு அதானிக்கு கொடுத்தது காங்கிரஸ். கூட்டணியை பற்றி விமர்சிப்பதற்கு முன்பு நீதிமன்றம் மூலம் கேள்வி கேட்டு பதவி விலக வேண்டிய நிர்பந்தம் திமுக கூட்டணிக்கு வந்ததா? வேறு கூட்டணிக்கு வந்ததா?  அப்பேற்பட்ட கூட்டணியை நடத்துற முதலமைச்சர் எங்க கூட்டணியை பேசுகிறார். 

சிவில் சர்வீசஸ்:

பாரத நாட்டில் சிவில் சர்வீஸஸில் தமிழ் மக்களின் பங்களிப்பு இன்னும் அதிகளவில் இருக்க வேண்டும். அதனால், தேர்ச்சி அடைந்து நீங்கள் வெளியில் வந்தால் உங்களுக்கு நல்ல வாய்ப்பு. நாடு முழுவதும் பயணிக்கும்போது திரிபுரா, நாகலாந்து, அசாமில, காஷ்மீர் உள்ளனர். நமக்கு உள்ள திறமையை பயன்படுத்திக் கொள்ள இது நல்ல வாய்ப்பு.

ஜிஎஸ்டி வரி விதிப்பு:

ஜிஎஸ்டி பற்றி பேசும்போது நான் தனிநபராக பேசவில்லை. ஒவ்வொரு மாநிலத்தில் இருந்து வரக்கூடிய நிதியமைச்சர்களுடன் உட்கார்ந்து எடுக்கக்கூடிய முடிவுதான் ஜிஎஸ்டி. ஜிஎஸ்டினா மோடி போட்டுட்டாரு வரினு வந்துகிட்டே இருக்குது. அது தப்பு. ஜிஎஸ்டி ஆணையத்துல அனைத்து மாநில நிதியமைச்சர்களும் உள்ளனர். 

2017க்கு முன்னாடி வாட், மாநில வரி இருந்தது. மேலும், மாநிலத்தில் இருந்த கூடுதல் வரிகள். கிட்டத்தட்ட 17 வரிகளும், 9 செஸ்  கலந்தும்தான் ஜிஎஸ்டி ஆகியுள்ளது. ஜிஎஸ்டி வந்த பிறகுதான் நடுத்தர மக்கள் பயன்படுத்தக்கூடிய தினசரி பொருட்கள் மீது வரி ஏறிடுச்சு அப்படிங்குற வாதம் தப்பு. ஜிஎஸ்டி வர்றதுக்கு முன்னாடி இருந்தே வரி வந்துடுச்சு. 

வரி விகிதம்:

முன்னாடி இருந்த வரி விகிதத்தை விட ஜிஎஸ்டி வரி விகிதம் குறைவு. இன்னும் அதை குறைப்பதற்குத்தான். கடைகளில் முன்பு பில்லை காட்டும்போது அதைக்காட்டவில்லை. இப்போது காட்டுகின்றனர். இப்போது நேர்மையாகவும், வெளிப்படையாகவும் அதைப் போடுகிறோம். ஜிஎஸ்டி-யில் எடுக்கக்கூடிய ஒவ்வொரு தீர்மானமும் அனைத்து மாநில அமைச்சர்களின் ஒப்புதலுடன் எடுக்கப்படுகிறது. நான் ஒருத்தி மட்டும் எடுக்க முடியாது. 

அரசியல் லாபம்:

சாதிய பற்றிய விஷயத்துல திமுக வெற்றி தேடுதா? அது எங்களுடைய வெற்றினு திமுக சொன்னால் சாதியை பத்தி திமுக-ல பேசக்கூடாது. எல்லாத்துலயும் அரசியல் லாபத்தை தேடக்கூடாது. 

இவ்வாறு அவர் கூறினார்.