நாட்டில் பச்சிளம் குழந்தைகளின் மரண விகிதம் கடந்த சில ஆண்டுகளில் ஓரளவுக்குக் குறைந்து வந்தாலும் கூட, 36 குழந்தைகளுக்கு ஒரு குழந்தை முதல் பிறந்தநாளுக்கு முன்பாக மரணித்து விடுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
குழந்தை இறப்பு விகிதம் (IMR)
ஒரு நாடு அல்லது ஒரு பிராந்தியத்தின் ஒட்டுமொத்த சுகாதார சூழ்நிலையின் குறிகாட்டியாக பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது இந்த ஐஎம்ஆர் குறியீடு. இது ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில், குறிப்பிட்ட இடத்தில், ஆயிரம் குழந்தை பிறப்புகளில், எத்தனை குழந்தைகள் இறக்கின்றன என்பதை வரையறுக்கிறது.
ஐஎம்ஆர் 2020
ஐஎம்ஆர் எனக் கூறப்படும் குழந்தைகளின் இறப்பு விகிதம் 2020ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்டி, உயிருடன் பிறக்கும் ஆயிரம் குழந்தைகளில், 28 குழந்தைகள் முதல் பிறந்தநாளுக்குள் மரணித்து விடுகின்றன. இது கடந்த 1971ஆம் ஆண்டில் ஆயிரம் குழந்தைகளுக்கு 129 குழந்தைகள் மரணம் என்ற விகிதத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனடிப்படையில் தற்போது இது நான்கில் ஒரு பங்காகக் குறைந்திருப்பதாக கூறுகிறார்கள்.
கடந்த பத்தாண்டுகளில்…
கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் குழந்தைகளின் இறப்பு விகிதமானது 36 சதவீதம் குறைந்திருப்பதாக கூறப்படுகிறது. அதாவது 1000 குழந்தைகளில் 44 குழந்தைகள் இருப்பதில் இருந்து 28 மரணங்களாக குறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஊரகப் பகுதிகளில் இது 48லிருந்து 31 ஆகவும், நகரப் பகுதிகளில் 29லிருந்து 19 ஆகவும் குறைந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதன் படி முன்பை போலவே நகரப் பகுதிகளை விட ஊரகப் பகுதிகளே அதிகம் பாதிக்கப்படுகின்றன. 2020 ஆம் ஆண்டில், அதிகபட்ச ஐஎம்ஆர் மத்தியப் பிரதேசமும் (43), குறைந்தபட்சம் மிசோரமும் (3) பதிவு செய்துள்ளன.
பிறப்பு விகிதமும் குறைந்துள்ளது
அகில இந்திய அளவில் பிறப்பு விகிதம் கடந்த ஐம்பது வருடங்களில் வெகுவாக குறைந்துள்ளது. 1971 இல் 36.9 ஆக இருந்த பிறப்பு விகிதம், 2020 இல் 19.5 ஆக குறைந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் பிறப்பு விகிதம் சுமார் 11 சதவீதம் குறைந்துள்ளது, 2011 இல் 21.8 இல் இருந்து 2020 இல் 19.5 ஆக உள்ளது. இந்த மாற்றம் கிராமைப்புரங்களிலும் வெகுவாக ஏற்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் 23.3 முதல் 21.1 சதவிகிதமாக குறைந்துள்ளது, நகர்ப்புறங்களில் இது 17.6 முதல் 16.1 ஆக குறைந்துள்ளது. பிறப்பு விகிதம் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஆயிரம் பேர் மக்கள் தொகைக்கு மத்தியில் எத்தனை குழந்தைகள் பிறக்கின்றன என்பதை வைத்து கணக்கிடப்படுவது ஆகும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்