காதலர் தினத்தன்று திட்டமிடப்பட்டிருந்த பசு அணைப்பு தினத்தால் ஈர்க்கப்பட்ட டெல்லி பல்கலைக்கழகத்தின் லக்ஷ்மிபாய் கல்லூரி, அந்த தினம் கைவிடப்பட்ட நிலையில், பிப்ரவரி 14 அன்று, இயற்கையை பாதுகாக்கும் வகையில், "மரங்கள் மற்றும் விலங்குகளுடன் செல்ஃபி" எடுத்து கொண்டாடுமாறு அனைவரையும் வலியுறுத்தியுள்ளது.


இயற்கை அரவணைப்பு தினம்


"லவ் உர் நேச்சர் அட் எல்பிசி" என்று இதற்கான டேக்லைன் உருவாக்கப்பட்டுள்ளது, அதோடு அந்த கல்லூரி ப்ரின்சிபல் பிரத்யுஷ் வத்சலா ஏற்கனவே ஒரு மரத்தை கட்டிப்பிடிப்பது போன்றும், ஒரு பசுவைத் தழுவுவது போன்றும் புகைப்படத்தை வெளியிட்டு நிகழ்ச்சியை துவங்கி வைத்துள்ளார்.


யார் வேண்டுமானாலும் #luvyounaturelbc என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தலாம் என்றும், இதனை பயன்படுத்தி பேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடகங்களில் அவரவர் படத்தை வெளியிடலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. சிறந்த மூன்று பதிவுகளுக்கு ஆச்சரியப் பரிசுகள் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளளது. 



காதல் இல்லாமல் இருக்கலாம்…


“காதலர் தினத்தைக் கொண்டாடுவதோடு, அன்பான இயற்கையின் மீதும் நம் அன்பைக் காட்ட வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். காதல் இல்லாமல், இருந்துவிடலாம், ஆனால் இயற்கை இல்லாமல், வாழ்க்கை இல்லை. மாணவர்களும் செல்ஃபி பாயின்ட்களை உருவாக்கி வளாகத்தில் சுவர்களை அலங்கரித்துள்ளனர்,” என்றார் ப்ரின்சிபல் வத்சலா.


தொடர்புடைய செய்திகள்: Valentines Day Wishes: ஏதாவது ஒன்று சொல்! பொறுப்பதா? போவதா? - உங்கள் காதலை சக்சஸ் ஆக்க நச் கவிதைகள்!


கல்லூரிக்குள் சிறிய கிராமம்


கல்லூரிக்குள் ஏற்கனவே வாத்துகள் கொண்ட குளம், ஓலைக் குடில், யாகசாலை, ஊஞ்சல்கள் மற்றும் ஒரு மாடு மற்றும் ஒரு கன்று கொண்ட மாட்டுத் தொழுவம் கொண்ட ஒரு சிறிய கிராமம் உள்ளது. அதன் சுவர்கள் பல்வேறு கலை வடிவங்களால் வரையப்பட்டுள்ளன. "சிறிய கிராமம் போல, கிராமங்களில் உள்ள குடிசைத் தொழில்கள் போன்று, இப்பகுதி மாணவர்களால் சிறு தொழில் முனைவுகளை உருவாக்க பயன்படுகிறது. ஐஐடி டெல்லியில் ஒரு பயோகேஸ் ஆலையும் உள்ளது. இதை உருவாக்கியதன் முழுநோக்கமும் மாணவர்களுக்கு கிராமப்புற வாழ்க்கையின் உணர்வை ஏற்படுத்துவதுதான், ”என்று வத்சலா கூறினார்.



சாஹிபி நதி தூய்மைப்படுத்துதல்


ஹன்ஸ்ராஜ் கல்லூரி, பசு ஆராய்ச்சி மையத்தைத் தொடங்கியுள்ள மற்றொரு DU நிறுவனம் ஆகும். அதன் அடிப்படையில். எல்பிசி நஜாப்கர் வடிகால் வரை பேரணியை நடத்தி அதன் மறுசீரமைப்பில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளது. "நஜாப்கர் வடிகால் எங்கள் கல்லூரி வழியாக செல்கிறது, எனவே அதை மறுசீரமைக்க ஏன் செயல்படக்கூடாது என்று நாங்கள் நினைத்தோம்? நாங்கள் இதுகுறித்த நடவடிக்கையில் ஈடுபட்டு, திட்டத்தை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்பதைப் பார்க்கப் போகிறோம்,” என்றார் வத்சலா. அதன் போஸ்டரில், “சாஹிபி நதி நஜஃப்கர் வடிகாலை, தூய்மையான சாஹிபி நதி நீர் பாதுகாப்பாக மாற்றுவதே எங்கள் தீர்மானம்", என்று எழுதப்பட்டிருந்தது.