மும்பை இந்தியாவின் நுழைவுவாயில் பகுதியில் இருந்து எலிபென்ட்டா தீவுக்கு சென்ற படகு விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13- ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவின் நுழைவு வாயில் பகுதியில் இருந்து எலிபெண்ட்டா குகைக்கு ( Elephanta Island,) சுற்றுலா செல்ல படகு புறப்பட்டுள்ளது. படகு பாதி வழியில், விபத்து காரணமாக திடீரென மூழ்க தொடங்கியுள்ளது. இந்திய கடற்படையின் க்ராஃப் ட்ரயிலில் ஈடுபட்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து படகு மீது மோதியுள்ளது. இதனால் படகு மூழ்கி பயணிகள் தத்தளித்தபோது இந்திய கடற்படையின் Subhadra Kumari Chauhan கப்பல் மூலம் பாதுகாப்பு கவசம் கொடுக்கப்பட்டு பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்போது உயிரிழப்பு எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
விபத்து ஏற்பட்டதான காரணம் ஏதும் இதுவரை தெரிவிக்கப்பட்டவில்லை. இந்திய கடற்படை க்ராஃப் எஞ்சினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இருக்காலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜவஹர்லால் நேரு துறைமுக அதிகாரிகள், காவல் துறையினர் இந்திய கடற்படையினர், இவார்களோடு மீனவர்கள் மீட்பு பணிக
ளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிர முதலமைச்சர் தேவிந்திர ஃபட்னாவிஸ் மீட்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாக எகஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். "அவருடைய பதிவில், நிக்கமல் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது வருத்தம் அளிக்கிறத்து. இந்திய கடற்படையின், கடலோர காவல் படை, துறைமுக காவல் துறை ஆகியோர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பயணிகளில் பெரும்பாலானோர் மீட்கப்பட்டுவிட்டனர். " என்று தெரிவித்திருந்தார்.
4 ஹெலிகாப்டர்கள், 11 கடற்படை கப்பல்கள், கடலோர காவல் படையினரின் கப்பல் ஒன்று, கடற்படை காவல்களிரின் மூன்று வாகனங்கள் ஆகியவை மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
கடற்படை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, இதுவரை 99 பேர் மிட்கப்பட்டுள்ளனர்.